ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 16வது சீசன் வெற்றிகரமாக நடந்துவருகிறது. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன.
அதேபோல ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்திய வெற்றிகரமான வீரர்கள் பலர் இருக்கின்றனர். தோனி, சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், ஃபாஃப் டுப்ளெசிஸ், டேவிட் வார்னர், லசித் மலிங்கா, சுனில் நரைன், கைரன் பொல்லார்டு, ரஷீத் கான் என பல வீரர்கள் ஐபிஎல்லில் வெற்றிகரமான வீரர்களாக திகழ்கின்றனர். ஐபிஎல்லில் பல சாதனைகளையும் இவர்கள் படைத்திருக்கின்றனர்.
ஆனால் இவர்களில் சுரேஷ் ரெய்னாவை தவிர யாருமே செய்திராத ஒரு தனித்துவமான சாதனையை ரஷீத் கான் படைத்துள்ளார். இன்று குஜராத் டைட்டன்ஸுக்காக கேகேஆருக்கு எதிரான போட்டியில் ரஷீத் கான் ஆடிவருகிறார். இது அவரது 100வது ஐபிஎல் போட்டி ஆகும். இதன்மூலம் ஐபிஎல்லில் 100 போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடி சாதனை படைத்துள்ளார் ரஷீத் கான்.
இதற்கு முன் சுரேஷ் ரெய்னா மட்டுமே தொடர்ச்சியாக 100 போட்டிகளில் ஆடியுள்ளார். ரெய்னா ஐபிஎல்லில் தொடர்ச்சியாக 143 போட்டிகளில் ஆடி முதலிடத்தில் இருக்கும் நிலையில், அவருக்கு அடுத்த இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் ரஷீத் கான். தோனி, கோலி, ரோஹித், டிவில்லியர்ஸ் மாதிரியான மிகப்பெரிய வீரர்களே படைக்காத சாதனை இது.
2017லிருந்து 2021 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி அந்த அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்த ரஷீத் கான், 2022லிருந்து குஜராத் டைட்டன்ஸுக்காக ஆடிவருகிறார்.