தப்பு பண்ணிய குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா?

First Published | Apr 29, 2023, 5:35 PM IST

கொல்கத்தாவின் கோட்டையான ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.
 

குஜராத் டைட்டன்ஸ்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கும் இடையிலான 39ஆவது போட்டி தற்போது நடந்து வருகிறது. கடைசியாக நடந்த 9 போட்டிகளில் முதலில் பேட்டிங் ஆடிய அணி வெற்றி பெற்றுள்ளது. 
 

குஜராத் டைட்டன்ஸ்

லக்னோ, மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தோல்வியை சந்தித்துள்ளன.
 


குஜராத் டைட்டன்ஸ்

அந்த வகையில் கொல்கத்தாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். அதன்படி தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. தற்போது வரையில் கேகேஆர் அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் குவித்துள்ளது.
 

குஜராத் டைட்டன்ஸ்

ஆனால், ஐபிஎல் 16ஆவது சீசனின் ஆரம்பத்தில் ஹோம் மைதானங்களில் நடந்த போட்டிகளில் அந்தந்த அணிகள் தான் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், அதன் பிறகு நடந்த போட்டிகளில் எதிரணிகள் வெற்றி பெற்றுள்ளன. அதனை கருத்தில் கொண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
 

குஜராத் டைட்டன்ஸ்

எனினும், இந்தப் போட்டியின் முடிவு குறித்து தான் சேஷிங் பெஸ்டா இல்லை ஃபர்ஸ்ட் பேட்டிங் பெஸ்டா என்பதற்கான முடிவு கிடைக்கும். இந்த ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 6 போட்டிகளில் 4 போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது.
 

குஜராத் டைட்டன்ஸ்

இதில் முதலில் ஆடிய அணியின் அவரேஜ் அதிகபட்ச ஸ்கோர் 222 ரன்களாகும். இங்கு நடந்த போட்டிகளில் முதலில் ஆடிய அணி வெற்றி பெற்றுள்ளது.

Latest Videos

click me!