ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் பார்ட் முடிந்த நிலையில், 2ஆவது பார்ட் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
அதில், ஹோம் மைதானங்களில் நடந்த போட்டிகளில் அந்தந்த அணிகள் தான் வெற்றி பெற்று வந்தன. அதன் பிறகு போட்டி உள்டாவாக மாறியது. மாறாக, ஹோம் மைதானங்களில் நடந்த போட்டிகளில் எதிரணி தான் அதிகளவில் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ்செ
இதே போன்று முதலில் ஆடிய அணியை விட சேஷிங் செய்த அணி அதிகளவில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தான் தற்போது கடைசியாக ஆடிய 9 போட்டிகளில் சேஷிங் செய்த அணி வரிசையாக தோல்வியை சந்தித்து வந்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்
அதில் லக்னோ, மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தோல்வியை சந்தித்துள்ளன.
பஞ்சாப் கிங்ஸ்
கடந்த 27 ஆம் தேதி சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் ஆடியது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் 202 ரன்கள் குவித்த நிலையில், பின்னர் ஆடிய சென்னை அணி 170 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
குஜராத் டைட்டன்ஸ்
இதே போன்று பெங்களூருவில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்து வீசியது. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
குஜராத் டைட்டஸ்
இவ்வளவு ஏன், நேற்று பஞ்சாப் அணியின் கோட்டையான மொஹாலியில் நடந்த போட்டியில் பஞ்சாப் டாஸ் வென்று பீல்டிங் செய்தது. இந்தப் போட்டியில் லக்னோ அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் கிங்ஸ்
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொல்கத்தாவின் கோட்டையான ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் முதலில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்தால் வெற்றி பெறலாம்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
அதே போன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் டெல்லியின் கோட்டையான அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.