ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் அபாரமாக விளையாடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, கேகேஆர் அணிகள் வெற்றி தோல்விகளை மாறி மாறி பெற்றுவருகின்றன. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 2 அணிகளும் தான் இந்த சீசனில் படுமோசமாக ஆடி புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன.
தலா 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மோதுகின்றன. டெல்லியில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:
டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், மனீஷ் பாண்டே, சர்ஃபராஸ் கான், அக்ஸர் படேல், அமான் கான், ரிப்பல் படேல், அன்ரிக் நோர்க்யா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா.
உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேக் ஷர்மா, ஹாரி ப்ரூக், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), மயன்க் அகர்வால், ஹென்ரிச் கிளாசன், மார்கோ யான்சன், அப்துல் சமாத், மயன்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக்.