அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் தான் கல் சோமானி. கல்வி தொழில்நுட்பம் (Ed-Tech), செயற்கை நுண்ணறிவு (AI), விளையாட்டு தொழில்நுட்பம் என பல துறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இன்ட்ராஎட்ஜ் ட்ரூயோ, ட்ரூயோ ஏஐ (IntraEdge Truyo, Truyo AI) போன்ற நிறுவனங்களின் நிறுவனரும் இவர்தான். 2021-ல் இருந்தே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு சிறிய முதலீட்டை செய்திருந்த சோமானி, ஐபிஎல்-இன் வளர்ச்சியை கணித்துதான் இப்போது முழு பங்குகளையும் வாங்க முன்வந்துள்ளார்.
சிட்டி கோல்ஃப் கிளப் இணை உரிமையாளர்
விளையாட்டுத் துறையில், டெட்ராய்ட் நகரின் பிரபலமான கோல்ஃப் அணியான மோட்டார் சிட்டி கோல்ஃப் கிளப்பின் இணை உரிமையாளராகவும், TMRW ஸ்போர்ட்ஸ், TGL கோல்ஃப் லீக் போன்ற முயற்சிகளில் தொடக்க கால முதலீட்டாளராகவும் இருக்கிறார். கோல்ஃப் உலகின் ஜாம்பவான்களான டைகர் வுட்ஸ், ரோரி மெக்ல்ராய் ஆகியோர் இதில் சோமானியின் முதலீட்டாளர்கள்.