இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. ஆனால் பெங்களூருவில் கனமழை காரணமாக ஆர்சிபி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி கைவிடப்பட்டது. இன்று பஞ்சாப் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
ராஜஸ்தான் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் படுமோசமாக விளையாடி தொடரில் இருந்து ஏற்கெனவே வெளியேறி விட்டது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி பாஸ்ட் பவுலர் சந்தீப் சர்மா காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்கா பாஸ்ட் பவுலர் நந்த்ரே பர்கரை ரூ.3 கோடிக்கு அணியில் சேர்த்தது.
24
சந்தீப் சர்மாவுக்கு பதில் நந்த்ரே பர்கர் சேர்ப்பு
ஆனால் இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எடுத்த நந்த்ரே பர்கரும் அந்த அணிக்காக எஞ்சி இருக்கும் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது தான். ஏனெனில் காயத்தால் வெளியேறிய சந்தீப் சர்மாவுக்கு பதிலாக எடுக்கப்பட்ட அணியில் எடுக்கப்பட்ட அவரும் காயத்தால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. இதனால் நந்த்ரே பர்கர் 2026 ஐபிஎல் சீசனில் தான் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுவார்.
34
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது விமர்சனம்
இன்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நந்த்ரே பர்கர் விளையாடவில்லை. இதனால் அவரை தேவையில்லாமல் அணியில் சேர்த்தது ஏன்? என ராஜஸ்தான் அணிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ராவும் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். "ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லை. நந்த்ரே பர்கர் இல்லை.
பர்கர் வரவில்லை அல்லது அவர் ஏற்கனவே காயமடைந்துவிட்டார். அவர் கிடைக்கவில்லை என்று நான் யோசிக்கிறேன். நீங்கள் என்ன செய்தீர்கள்? சந்தீப் சர்மாவுக்கு மாற்றாக அவரை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மாற்றாக வரும் வீரர் காயமடைந்தால் நீங்கள் மாற்றீட்டை எடுக்க மாட்டீர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ஆகாஷ் சோப்ரா, ''அவர்கள் (ராஜஸ்தான்) அடிப்படையில் அடுத்த ஆண்டுக்கு மட்டுமே இதைச் செய்துள்ளனர். ராஜஸ்தான் இந்த ஆண்டு பற்றி யோசிக்கவே இல்லை, ஏனென்றால் அவர் (பர்கர்) கிடைக்காததால் அவர் இப்போது விளையாட முடியாது. அடுத்த ஆண்டு ஏலத்தில் வெற்றிபெற அவர்கள் ஒரு கிடைக்காத வீரரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். மிகவும் சுவாரஸ்யமான தேர்வு'' என்று கிண்டலாக கூறியுள்ளார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் நந்த்ரே பர்கர் தென்னாப்பிரிக்காவுக்காக முழு அளவிலான சர்வதேச வீரராக உள்ளார். 69 டி20 போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பர்கர் முன்பு ஐபிஎல் 2024 இல் ஆர்ஆர் அணிக்காக விளையாடியுள்ளார். 6 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.