Rahul Tewatia Bat Tampering Caught by Umpire : குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராகுல் தெவாட்டியா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது விதிமுறைகளை மீறிய பேட்டை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராகுல் தெவாட்டியா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது விதிமுறைகளை மீறிய பேட்டை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அம்பயர்கள் உடனடியாக தலையிட்டு பேட்டை மாற்றச் சொன்னதால் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது மைதானத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. குஜராத் அணியின் ஆல்-ரவுண்டர் ராகுல் தெவாட்டியா, விதிமுறைகளுக்குப் புறம்பான பேட்டுடன் களமிறங்கியதுதான் இந்த பரபரப்புக்குக் காரணம். சந்தேகமடைந்த கள நடுவர்கள், தெவாட்டியாவின் பேட்டை சோதனை செய்து, உடனடியாக அந்த பேட்டை மாற்றும்படி உத்தரவிட்டனர்.
24
IPL 2026 GT vs PBKS Match
குஜராத் இன்னிங்ஸின் 19-வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. வாஷிங்டன் சுந்தர் அவுட் ஆனதும், ராகுல் தெவாட்டியா பேட்டிங் செய்ய வந்தார். அவர் பேட்டிங் செய்ய தயாராவதற்கு முன்பே, நடுவர்கள் அவரை தடுத்து, பேட்டின் அளவை சரிபார்க்கும் 'பேட் கேஜ்' (Bat Gauge) கருவியைக் கொண்டு வருமாறு கேட்டனர். அந்த சோதனையில், தெவாட்டியாவின் பேட்டின் பக்கவாட்டுப் பகுதி (Edges) அனுமதிக்கப்பட்ட அளவை விட தடிமனாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடுவர்களின் கண்டிப்பான உத்தரவின் பேரில் தெவாட்டியா வேறு பேட்டை எடுத்து வர வேண்டியதாயிற்று.
மெரில்போன் கிரிக்கெட் கிளப் (MCC) விதிகளின்படி, ஒரு கிரிக்கெட் பேட்டின் அகலம் அதிகபட்சம் 10.8 செ.மீ, தடிமன் 6.7 செ.மீ, மற்றும் பக்கவாட்டுப் பகுதி 4 செ.மீ-க்கு மேல் இருக்கக்கூடாது. பேட்ஸ்மேன்கள் பெரிய அளவிலான பேட்களைப் பயன்படுத்தி கூடுதல் சாதகம் பெறுவதைத் தடுக்க, பிசிசிஐ இந்த விதிகளை கடுமையாக்கியுள்ளது. வரும் 2025 ஏப்ரல் முதல் ஐபிஎல் போட்டிகளில் 'பேட் கேஜ்' சோதனை கட்டாயமாக்கப்பட உள்ளது. பொதுவாக, பேட்ஸ்மேன் களத்திற்குள் நுழைவதற்கு முன்போ அல்லது போட்டிக்கு நடுவிலோ நடுவருக்கு சந்தேகம் ஏற்பட்டால், பேட்டை சோதனை செய்ய முடியும். சமீபத்தில், ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் கூட இந்த சோதனையைச் செய்துகொள்ளும் காட்சிகள் வெளியாகி இருந்தன.
44
IPL 2026 Viral Video Tamil
இந்தப் போட்டியில் தெவாட்டியா 10 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பெரிய ஷாட்களுக்குப் பெயர் பெற்ற அவர் களத்தில் இருந்தும், கடைசி ஐந்து ஓவர்களில் குஜராத் அணியால் 34 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய பஞ்சாப் அணி, பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் தடுமாறினாலும், 5 பந்துகள் மற்றும் 3 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.