மிரட்டிய வருண் சக்கரவர்த்தி:
ஐந்தாவது ஓவரில், ஜோஷ் இங்கிலிஸ், வருண் சக்ரவர்த்தியால் கிளீன் போல்ட் செய்யப்பட்டார். அவர் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார். பஞ்சாப் அணி 4.5 ஓவர்களில் 42/3 என்ற நிலையில் இருந்தது.
பவர் பிளேயின் கடைசி ஓவரில், பிரப்சிம்ரன் ஹர்ஷித் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். இருப்பினும், ஹர்ஷித்-ராமன்தீப் ஜோடியால் பிரப்சிம்ரன் 15 பந்துகளில் 30 ரன்கள் (இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார். பவர் பிளேயின் முடிவில் பஞ்சாப் அணி 54/4 என்ற நிலையில் இருந்தது.
நெஹால் வதேரா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால், அன்ரிச் நோர்ட்ஜே பந்துவீச்சில் வெங்கடேஷ் ஐயரிடம் வதேரா (10) கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி 8.4 ஓவர்களில் 74/5 என்ற நிலையில் இருந்தது. பின்னர், சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். கிளென் மேக்ஸ்வெல் (7) வருண் சக்ரவர்த்தியால் ஆட்டமிழந்தார்.