2.1 ஓவரில் 4 விக்கெட் காலி – பஞ்சாப் கிங்ஸ் சோலிய முடிச்ச பும்ரா, கோட்ஸி!

First Published Apr 18, 2024, 10:41 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 33ஆவது ஐபிஎல் 2024 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் 2.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றனர்.

Punjab Kings vs Mumbai Indians

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 33ஆவது ஐபிஎல் 2024 போட்டி தற்போது முல்லன்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் விளையாடி 192 ரன்கள் குவித்தது.

PBKS vs MI

தொடக்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் 8 ரன்களில் ஆட்டமிழக்க, தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து 23ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். மேலும், அதிரடி காட்டிய ஸ்கை 53 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 78 ரன்களில் நடையை கட்டினார்.

Latest Videos


Punjab Kings

கேப்டன் ஹர்திக் பாண்டியா சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. அவர் 10 ரன்களில் நடையை கட்டினார். டிம் டேவிட் 14 ரன்னிலும், ரொமாரியோ ஷெப்பர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

Mumbai Indians

கடைசி வரை விளையாடிய திலக் வர்மா 18 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது.

PBKS vs MI, 33rd IPL 2024 Match

பின்னர் கடின இலக்க துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாம் கரண் மற்றும் பிராப்சிம்ரன் சிங் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை ஜெரால்டு கோட்ஸி வீசினார்.

PBKS vs MI, 33rd IPL 2024 Match

அந்த ஓவரில் முதல் பந்தில் சாம் கரண் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தை வைடாக வீசினார். மேலும், அந்த பந்து பவுண்டரிக்கும் சென்றது. அடுத்த பந்தில் லெக் பைஸில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. பின்னர் தனது முதல் பந்தை எதிர்கொண்ட பிராப்சிம்ரன் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

PBKS vs MI, IPL 2024 Match

அடுத்து வந்த ரிலீ ரோஸோவ் 1 ரன்னில் பும்ரா பந்தில் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து கேப்டன் சாம் கரன் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் 1 ரன்னில் நடையை கட்டினார்.

PBKS vs MI, 33rd IPL 2024 Match

அப்போது பஞ்சாப் கிங்ஸ் 2.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து போட்டியின் 6.5ஆவது ஓவரில் ஹர்ப்ரீத் சிங் 13 ரன்னில் ஷ்ரேயாஸ் கோபால் பந்தில் ஆட்டமிழந்தார்.

PBKS vs MI, 33rd IPL 2024 Match

தற்போது வரையில் பஞ்சாப் கிங்ஸ் 9 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற 66 பந்துகளில் 116 ரன்கள் எடுக்க வேண்டும். இதுவே மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற 5 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும்

click me!