சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 192 ரன்கள் குவித்த MI – கடைசி ஓவரை டைட்டா போட்ட ஹர்ஷலுக்கு பாராட்டு!

First Published | Apr 18, 2024, 9:51 PM IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் 33ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் சூர்யகுமார் யாதவ்வின் அதிரடியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்துள்ளது.

Punjab Kings vs Mumbai Indians, 33rd Match

முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 33ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் ஜெயிச்ச பஞ்சாப் கேப்டன் சாம் கரண் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது.

PBKS vs MI, Rohit Sharma 250th Match

தொடக்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் 8 ரன்களில் ஆட்டமிழக்க, தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Tap to resize

Punjab Kings vs Mumbai Indians

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து 23ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். மேலும், அதிரடி காட்டிய ஸ்கை 53 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 78 ரன்களில் நடையை கட்டினார்.

Punjab Kings vs Mumbai Indians

கேப்டன் ஹர்திக் பாண்டியா சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. அவர் 10 ரன்களில் நடையை கட்டினார். டிம் டேவிட் 14 ரன்னிலும், ரொமாரியோ ஷெப்பர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

Punjab Kings vs Mumbai Indians, 33rd Match

கடைசி வரை விளையாடிய திலக் வர்மா 18 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது.

PBKS vs MI, 33rd IPL 2024 Match

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சாம் கரண் 2 விக்கெட் எடுத்தார். கஜோசோ ரபாடா ஒரு விக்கெட் கைப்பற்றினார். இது அவரது 250ஆவது விக்கெட் ஆகும். அதுவும் இஷான் கிஷான் விக்கெட்டை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!