தோனிக்கு பிறகு தினேஷ் கார்த்திக் தான் ரொம்பவே டேஞ்சரஸ்மேன் – அம்பதி ராயுடு!

First Published Apr 17, 2024, 1:51 PM IST

தோனிக்கு பிறகு ரொம்பவே டேஞ்சரஸ் மேன் யார் என்றால் அது தினேஷ் கார்த்திக் தான் என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பதி ராயுடு கூறியுள்ளார்.

RCB, IPL 2024

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடருக்கு பிறகு தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறுவதில் முடிவாக இருக்கிறார். அதற்காக எப்படியும், ஆர்சிபிக்கு டிராபியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை கனவாக கொண்டு ஒவ்வொரு போட்டியிலும் விளையாடி வருகிறார்.

Royal Challengers Bengaluru

இதுவரையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடிய 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடமான கடைசி இடம் பிடித்துள்ளது.

Dinesh Karthik

கடைசியாக கடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி 85 ரன்கள் எடுத்தார். இதில் 7 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரி அடங்கும். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் குவித்தது.

MS Dhoni

இந்த சீசனில் ஒரு போட்டியில் மொத்தமாக 549 ரன்கள் குவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு தனது நண்பர் தினேஷ் கார்த்திக் ஹைதராபாத் அணிக்கு எதிராக பேட்டிங் செய்த விதம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: டெத் ஓவர்களில் தோனிக்கு பிறகு 2ஆவது ஆபத்தான் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்.

Ambati Rayudu

அவர் லோயர் ஆர்டரில் களமிறங்கி விளையாடுகிறார். ஆனால், இந்த நிலையில் நிலைத்து நின்று விளையாட நேரம் கிடைப்பதில்லை. கிரீஸூக்கு வந்த உடனே உங்களது ஷாட்டுகளை ஆட வேண்டும். அதனை தினேஷ் கார்த்திக் செய்திருக்கிறார்.

Ambati Rayudu

டெத் ஓவர்களில் ரன்கள் அடிப்பதில் அவர் ஆபத்தான பேட்ஸ்மேன். அவரது பேட்டிங் அனுபவம் டி20 உலகக் கோப்பையில் கை கொடுக்கும் என்பதால், அவர் உலகக் கோப்பை தொடரில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று தான் நினைப்பதாக கூறியுள்ளார்.

click me!