பிரித்வி ஷா இரட்டை சதம்; சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்..! 50 ஓவரில் 457 ரன்களை குவித்த மும்பை அணி

Published : Feb 25, 2021, 02:34 PM IST

புதுச்சேரிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் பிரித்வி ஷாவின் இரட்டை சதம் மற்றும் சூர்யகுமார் யாதவின் அதிரடி சதத்தால் 50 ஓவரில் 457 ரன்களை குவித்தது மும்பை அணி.  

PREV
13
பிரித்வி ஷா இரட்டை சதம்; சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்..! 50 ஓவரில் 457 ரன்களை குவித்த மும்பை அணி

விஜய் ஹசாரே தொடரில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற புதுச்சேரி அணி மும்பையை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பிரித்வி ஷா, தொடக்கம் முதலே அடித்து ஆடி இரட்டை சதமடித்தார். ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த 8வது இந்திய வீரர் என்ற சாதனையை பிரித்வி ஷா படைத்தார். 

23

கடந்த ஒன்றிரண்டு ஆண்டாகவே ஃபார்மில் இல்லாமல் போனதுடன் காயத்தாலும் அவதிப்பட்டு வந்த பிரித்வி ஷா விஜய் ஹசாரே தொடரில் அபாரமாக ஆடிவருகிறார். டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் சதமடித்த நிலையில், புதுச்சேரிக்கு எதிரான இன்றைய போட்டியில் மிக அபாரமாக ஆடி 152 பந்தில் 31 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 227 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

33

அவருடன் இணைந்து மிகச்சிறப்பாக ஆடிய மற்றொரு சிறந்த வீரரான சூர்யகுமார் யாதவ் காட்டடி அடித்து 58 பந்தில் 22 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 133 ரன்களை குவிக்க, மும்பை அணி 50 ஓவரில் 457 ரன்களை குவித்தது. 458 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை புதுச்சேரி அணி விரட்டிவருகிறது.

click me!

Recommended Stories