ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மாதிரியா பேசுற..? அசிங்கமா இல்ல..? நல்லா உரைக்கிற மாதிரி நறுக்குனு கேட்ட கிளார்க்

First Published Feb 24, 2021, 8:45 PM IST

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் தனது புறக்கணிப்பை முன்பே எதிர்பார்த்ததாக கூறியிருந்த ஆஸி., அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச்சை கடுமையாக விளாசியுள்ளார் ஆஸி., முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்.
 

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் கடந்த 18ம் தேதி சென்னையில் நடந்தது. இந்த ஏலம் முழுக்க முழுக்க ஃபாஸ்ட் பவுலர்களுக்கான ஏலமாக அமைந்தது. ஃபாஸ்ட் பவுலர்களுக்கான கிராக்கி அதிகமாக இருந்ததால், கிறிஸ் மோரிஸ்(ரூ.16.25 கோடி), கைல் ஜாமிசன்(ரூ.15 கோடி), ஜெய் ரிச்சர்ட்ஸன்(ரூ.14 கோடி), மெரிடித்(ரூ.8 கோடி) ஆகியோர் அதிக விலைக்கு ஏலம்போனார்கள்.
undefined
மோரிஸ், ஜாமிசன், ஜெய் ரிச்சர்ட்ஸன், மேக்ஸ்வெல் எல்லாம் அதிகமான தொகைக்கு ஏலம்போன அதேவேளையில், ஆரோன் ஃபின்ச், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், மார்டின் கப்டில், காலின் முன்ரோ ஆகிய அதிரடி வீரர்களை எந்த அணியும் எடுக்க முன்வராததால், அவர்களெல்லாம் விலைபோகவில்லை.
undefined
சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனான ஆரோன் ஃபின்ச்சை அவரது அடிப்படை விலைக்கு எடுக்கக்கூட எந்த அணியும் முன்வராததால், ஃபின்ச் விலைபோகவில்லை.
undefined
ஐபிஎல் ஏலத்தில் தான் புறக்கணிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த ஃபின்ச், நான் புறக்கணிக்கப்பட்டது எதிர்பார்த்ததுதான். கிரிக்கெட் ஆடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதுவும் ஐபிஎல் மாதிரியான மிகப்பெரிய டி20 லீக்கில் ஆடவேண்டும் என்றுதான் நினைப்போம். ஆனால் இந்த புறக்கணிப்பால், என் குடும்பத்துடன் இருக்க முடியும் என்று ஃபின்ச் தெரிவித்திருந்தார்.
undefined
தான் புறக்கணிப்படுவதை முன்பே எதிர்பார்த்ததாக ஃபின்ச் கூறியதற்கு ஆஸி., முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், அவரை கடுமையாக விளாசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள மைக்கேல் கிளார்க், நான் புறக்கணிக்கப்படுவ்தை முன்பே எதிர்பார்த்தேன் என்று அசால்ட்டாக கூறுகிறார் ஃபின்ச். நீங்க(ஃபின்ச்) டி20 ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்; அனைத்து அணிகளும் என்னை எடுக்க ஆர்வம் காட்டும் என்று நீங்கள் நம்பவேண்டுமே தவிர, என்னை எந்த அணியும் எடுக்க நினைக்காது என்று முன்பே தெரியும் என்று கூறலாமா என்று கடுமையாக விளாசியுள்ளார் மைக்கேல் கிளார்க்.
undefined
click me!