ஐபிஎல் தொடக்க போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், அதிலிருந்து மீண்டு வந்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி பெங்களூரு எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபிக்கு எதிராக தனது முதல் போட்டியில் களமிறங்கியது. இந்த போட்டியில், ஹென்ரிச் கிளாசென் 22 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ரொமாரியோ ஷெப்பர்ட் வீசிய பந்தில் கேட்ச் ஆனார். ஃபில் சால்ட்டின் இந்த அசத்தலான ஃபீல்டிங் முயற்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் இந்த கேட்ச் பெரும் சர்ச்சையாக மாறியது.
24
கிளாசன் கடும் கோபம்
ஏனெனில் சால்ட் அந்த கேட்ச்சை பிடித்தபோது பவுண்டரி லைன் குஷனில் அவரது உடம்பு பட்டது போல் தெரிந்தது. இதனால் முடிவு 3வது நடுவருக்கு சென்றது. பலமுறை ரீப்ளை போட்டு பார்த்த பிறகு அது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைப் பார்த்ததும் ஆர்சிபி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஹென்ரிச் கிளாசனும் கடும் அதிருப்தி அடைந்தார். இது தொடர்பாக அவர் மூன்றாம் நடுவரிடம் பேசி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி கடும் கோபத்தை காட்டினார். பில் சால்ட் பிடித்தது கேட்ச் சரியானதா? இல்லையா? கிளாசன் அவுட்டா? இல்லையா? என சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதம் எழுந்து வருகிறது.
34
இஷான் கிஷன் அதிரடி
முன்னதாக இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், அதிலிருந்து மீண்டு வந்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. பவர்பிளேயில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில், இஷான் கிஷனின் அதிரடி ஆட்டமும், பின்வரிசை வீரர்களின் பங்களிப்பும் ஹைதராபாத் அணியை 200 ரன்களைக் கடக்க உதவியது. இஷான் கிஷன் 38 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி அவுட் ஆனார்.
கடைசி கட்டத்தில் வலது கை பேட்ஸ்மேனான அனிகெட் வர்மா, வெறும் 18 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் விளாசினார். அவரது அதிரடியால் ஹைதராபாத் அணி 200 ரன்களைக் கடந்து. ஆர்சிபி தரப்பில் ஜேக்கப் டபி 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் சாய்த்து அசத்தினார். ரொமாரியோ ஷெப்பர்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.