மொத்த ஊரும் வீட்டில் கூடிய அந்த ஒரு நொடி..கண்கள் கலங்க.. கை தட்டி, ஆரத்தி சுத்தி, கொண்டாடிய நடராஜன் அம்மா..!

First Published Dec 4, 2020, 7:14 AM IST

இந்திய அணிக்காக தங்கராசு நடராஜன் பந்து வீச ஓடி வந்த அந்த ஒரு நொடி மொத்த தமிழ்நாடும் ஆனந்த கண்ணீர் வடித்தது நிஜம் .இந்திய அணியில் விளையாடும் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனை தொலைக்காட்சியில் பார்த்து அவரது தாய் கை தட்டி ,கண்கள் கலங்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் 
 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையான கடைசி ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இந்திய அணிக்கான ப்ளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்தார்.
undefined
இது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடராஜன் விளையாடும் முதல் போட்டியாகும். ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்ததால், கடைசி போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடியது
undefined
கடந்த இரண்டு போட்டிகளில் முதல் 25 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய ஓப்பனர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆஸ்திரேலிய நட்சத்திர ஆட்டக்காரராக மர்னஸ் லபுஷேனின் விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார்.
undefined
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விளையாடிய முதல் போட்டியிலேயே விக்கெட் எடுத்த நடராஜனுக்கு பலரும் சமூக வலைதளங்களில் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடராஜன் விளையாடுவதை தொலைக்காட்சியில் பார்த்த அவரது தாய் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.
undefined
இது குறித்து சின்னப்பம்பட்டியில் வசிப்பவர் ஒருவர் கூறுகையில், ‘சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்கிற சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நடராஜன், தற்போது வெளிநாட்டில் சென்று விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரால்தான் இந்த ஊருக்கே பெருமை.
undefined
click me!