IPL 2021 மெகா ஏலம்: இந்த வீரருக்குத்தான் பெரிய கிராக்கியா இருக்கும்.! உறுதியா நம்பும் இங்கி., முன்னாள் கேப்டன்

First Published Dec 3, 2020, 5:04 PM IST

ஐபிஎல் 2021க்கான மெகா ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வெல்லுக்குத்தான் பெரிய கிராக்கியாக இருக்கும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்தார்.
 

ஐபிஎல்லுக்கு முன் ஆஸ்திரேலிய அணிக்காக அபாரமாக ஆடி சதமடித்து வெற்றியை தேடிக்கொடுத்த கையோடு ஐபிஎல்லில் ஆடவந்த மேக்ஸ்வெல், பஞ்சாப் அணிக்காக சரியாக ஆடவில்லை. பஞ்சாப் அணியும் அவர் மீது நம்பிக்கை வைத்து அனைத்து போட்டிகளிலும் வாய்ப்பளித்தது. ஆனால் 11 இன்னிங்ஸ்களில் வெறும் 15.42 என்ற சராசரி மற்றும் 101.88 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தமாகவே வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.
undefined
ஐபிஎல்லில் சொதப்பினாலும் ஆஸ்திரேலியாவுக்காக ஆடும்போது வேற லெவலில் ஆடுகிறார். இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் அபாரமாகவும் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான இன்னிங்ஸை ஆடினார். 3 ஒருநாள் போட்டிகளில் 83.50 என்ற சராசரியுடனும் 194.18 என்ற ஸ்டிரைக் ரேட்டுடனும் 167 ரன்களை குவித்தார் மேக்ஸ்வெல்.
undefined
இந்நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனில் மேக்ஸ்வெல்லுக்கு பெரும் கிராக்கியாக இருக்கும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய மைக்கேல் வான், எந்தவிதமான வெள்ளைப்பந்து போட்டியாக இருந்தாலும் மேக்ஸ்வெல் மாதிரியான ஒரு வீரரை அந்த அணியும் விரும்பாமல் இருக்காது. அடுத்த ஐபிஎல் ஏலத்தில் நிறைய அணிகள் மேக்ஸ்வெல்லை எடுக்க ஆர்வம் காட்டும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
undefined
ஆஸ்திரேலிய அணி அவரை மிகச்சரியாக 7ம் வரிசையில் பேட்டிங் ஆடவைத்தது. தேவையில்லாமல் அவரது பேட்டிங் ஆர்டரை மாற்றவில்லை. கிட்டத்தட்ட சற்றேறக்குறைய ஒரே பேட்டிங் ஆர்டரில் தான் ஆடவைத்தது. மேக்ஸ்வெல் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்லாது, மிகச்சிறந்த ஃபீல்டரும் கூட. ஃபீல்டிங்கின் மூலம் நிறைய ரன்களை பாதுகாத்து கொடுப்பார். எனவே எந்த அணியுமே அவரை பெறத்தான் விரும்பும் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
undefined
click me!