#AUSvsIND தோனி கூட இத்தனை வருஷம் ஆடி, இதைக்கூட கத்துக்கலைனா எப்படி..? ஜடேஜா புகழாரம்

First Published Dec 3, 2020, 3:08 PM IST

தோனி கற்றுக்கொடுத்த வித்தையைத்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செயல்படுத்தியதாக ஜடேஜா தெரிவித்துள்ளார்.
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. கான்பெராவில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 32 ஓவரில் வெறும் 152 ரன்களுக்கு முக்கியமான ஐந்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது.
undefined
அதன்பின்னர் ஹர்திக் பாண்டியாவும் ஜடேஜாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி 18 ஓவரில் அடுத்த 150 ரன்களை குவித்தனர். ஹர்திக் பாண்டியா 76 பந்தில் 92 ரன்களையும், ஜடேஜா 50 பந்தில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 66 ரன்களையும் குவித்து இந்திய அணி 302 ரன்களை எட்ட உதவினர். கடைசி 10 ஓவரில் மட்டும் 110 ரன்கள் குவிக்கப்பட்டன. ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜாவின் பொறுப்பான, அதேநேரத்தில் அதிரடியான பேட்டிங்கால் தான் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடித்து, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற முடிந்தது.
undefined
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த இன்னிங்ஸ் குறித்து பேசிய ஜடேஜா, தோனி இந்திய அணிக்காகவும் சிஎஸ்கேவுக்காகவும் நிறைய ஆடியிருக்கிறார். மறுமுனையில் எந்த பேட்ஸ்மேன் நின்றாலும் சரி, அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை போட்டியை எடுத்துச்செல்வார் தோனி. களத்தில் செட்டில் ஆகி, கடைசி வரை எடுத்துச்சென்றால், டெத் ஓவர்களில் பெரிய ஷாட்டுகளை ஆடி ஸ்கோரை உயர்த்திவிடுவார்.
undefined
தோனியின் பேட்டிங்கை நிறைய பார்த்திருக்கிறேன். அவருடன் பலமுறை பார்ட்னர்ஷிப் அமைத்தும் இருக்கிறேன். அவர் என்னிடம் சொல்வது, போட்டியை கடைசி வரை எடுத்துச்சென்றால் கடைசி நான்கைந்து ஓவர்களில் ஸ்கோர் செய்துவிடலாம் என்பதுதான். இந்த போட்டியில் அதே நிலையில்தான் இருந்தோம். அதனால் நானும் ஹர்திக்கும் கடைசி வரை எடுத்துச்சென்ற கடைசி நான்கைந்து ஓவர்களில் அடித்துக்கொள்வோம் என்றுதான் எடுத்துச்சென்றோம் என்று ஜடேஜா தெரிவித்தார்.
undefined
click me!