ஐபிஎல் 2021 குறித்த முக்கிய முடிவை எடுக்கிறது பிசிசிஐ..! ஐபிஎல் அணிகளுக்கு அல்லு.. ரசிகர்களுக்கு குஷி

First Published Dec 3, 2020, 2:08 PM IST

ஐபிஎல் 2021ல் கூடுதலாக 2 அணிகளை சேர்ப்பது குறித்து பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படவுள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. கொரோனாவால் 13வது சீசன் தாமதமாக நடத்தப்பட்டதால், அடுத்த சீசன் 4 மாத இடைவெளியில் தொடங்கப்படும்.
undefined
14வது சீசனில் 2 அணிகளை கூடுதலாக சேர்க்கும் முனைப்பில் உள்ளது பிசிசிஐ. ஏற்கனவே 8 அணிகள் இருக்கும் நிலையில், கூடுதலாக 2 அணிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டு, ஐபிஎல்லில் சேர்க்கப்படவுள்ளது. கூடுதல் அணிகள் சேர்க்கப்படுவதால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.
undefined
இதுகுறித்த பேச்சு இருந்துவரும் நிலையில், அதிகாரப்பூர்வ அங்கீகாரமோ தகவலோ இன்னும் வரவில்லை. ஆனால் 2 அணிகள் சேர்க்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. பிசிசிஐயின் இந்த முன்னெடுப்புக்கு ஏற்கனவே இருக்கும் ஐபிஎல் அணி நிர்வாகங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
undefined
இந்நிலையில், இதுகுறித்து டிசம்பர் 24ம் தேதி நடக்கும் பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 24 விவகாரங்கள் குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ள நிலையில், அதில் இதுவும் ஒன்று. அந்த பிசிசிஐ கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
click me!