ஐபிஎல் 14வது சீசனின் இரண்டாவது பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 2வது பாகத்தின் முதல் போட்டியில் சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, இன்றைய போட்டியில் கேகேஆரை எதிர்கொள்கிறது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டி அபுதாபியில் நடக்கிறது. சிஎஸ்கேவிற்கு எதிராக ஆடிராத ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் இன்றைய போட்டியில் ஆடுவார்கள்.
எனவே அவர்களுக்கு பதிலாக கடந்த போட்டியில் ஆடிய அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் சவுரப் திவாரி ஆகிய இருவரும் இன்றைய கேகேஆருக்கு எதிரான போட்டியில் ஆடமாட்டார்கள்.
உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்ப்ரித் பும்ரா, டிரெண்ட் போல்ட்.