IPL 2023: இஷான் கிஷானின் கேர்ல் ஃப்ரண்ட் யாருன்னு தெரியுமா?

Published : Apr 08, 2023, 07:52 PM ISTUpdated : Apr 08, 2023, 08:48 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான இஷான் கிஷான் நீண்ட காலமாக மாடல் நடிகையான அதிதி ஹந்தியா என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.  

PREV
19
IPL 2023: இஷான் கிஷானின் கேர்ல் ஃப்ரண்ட் யாருன்னு தெரியுமா?
இஷான் கிஷான் - அதிதி ஹந்தியா

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 31 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.
 

29
இஷான் கிஷான் - அதிதி ஹந்தியா

இதில், ரோகித் சர்மா, கேமரூன் க்ரீன், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் என்று நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால், இவர்கள் யாரும் அன்றைய போட்டியில் சோபிக்கவில்லை. மாறாக திலக் வர்மாவின் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

39
இஷான் கிஷான் - அதிதி ஹந்தியா

ஆனால், 16.2 ஆவது ஓவரிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 172 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இஷான் கிஷான் 76 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 71 இன்னிங்ஸில் பங்கேற்று 1880 ரன்கள் எடுத்துள்ளார். 
 

49
இஷான் கிஷான் - அதிதி ஹந்தியா

இதில் 12 முறை அரைசதம் எடுத்துள்ளார். ஒரு முறை கூட சதம் விளாசவில்லை. 168 பவுண்டரிகளும், 85 சிக்ஸர்களும் அடித்திருக்கிறார். இந்த சீசனில் ஒரு போட்டியில் விளையாடி 10 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.
 

59
இஷான் கிஷான் - அதிதி ஹந்தியா

கடந்த 1998 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி பீகாரில் பாட்னாவில் பிறந்துள்ளார். இவரது பெற்றோர் பிரனவ் குமார் பாண்டே - சுஜீத்ரா சிங். இவரது மூத்த சகோதரர் ராஜ் கிஷான். இஷான் கிஷானின் பயிற்சியாளர் உத்தம் மஷூம்தார். 
 

69
இஷான் கிஷான் - அதிதி ஹந்தியா

இஷான் கிஷானின் தந்தைக்கு அவர் கிரிக்கெட் விளையாடுவது ரொம்ப பிடிக்குமாம். ஆதலால் அவர் கிரிக்கெட் விளையாடுவதை தடுக்க வில்லை. மாறாக எதிர்காலத்தில் சிறந்த வீரராக வருவார் என்று நம்பிக்கை மட்டும் அவரிடத்தில் இருந்துள்ளது. ஒரு நாள் ஐபிஎல் ஏலத்தின் போது மகனுக்கு வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றத்தில் இருந்த பிரனவிற்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது.

79
இஷான் கிஷான் - அதிதி ஹந்தியா

இதன் காரணமாக அவர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். மகனுக்கு குஜராத் லயன்ஸ் அணியில் ஐபிஎல் ஒப்பந்தம் கிடைத்தது குறித்து அறிந்த பிரனவ் மருத்துவமனையில் தனக்கு மாட்டப்பட்டிருந்த எல்லா உபகரணங்களையும் கழற்றி எறிந்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார்.

89
இஷான் கிஷான் - அதிதி ஹந்தியா

இரண்டு ஆண்டுகள் குஜராத் லயன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இஷான் கிஷான், 2018 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். தற்போது வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.  கடந்த 2017 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளராக இருந்த மாடல் நடிகை அதிதி ஹந்தியா என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவர் விளையாடும் போட்டிகளில் மைதானத்திற்கு வந்து அவருக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்.

99
இஷான் கிஷான் - அதிதி ஹந்தியா

இவ்வளவு ஏன், இஷான் கிஷான், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்த போது கூட அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ஆனால், இருவரும் தங்களது காதல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது காதலிப்பது உண்மையாக இருந்தால் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories