IPL 2023: என்னைய அடிச்சுக்க ஆளே இல்லடா.. டி20-யில் முதலிடம் பிடித்த தோனி..! 41 வயதிலும் தல படைத்த தரமான சாதனை

Published : Apr 22, 2023, 03:44 PM IST

டி20 கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார் தோனி.   

PREV
15
IPL 2023: என்னைய அடிச்சுக்க ஆளே இல்லடா.. டி20-யில் முதலிடம் பிடித்த தோனி..! 41 வயதிலும் தல படைத்த தரமான சாதனை

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவர் தோனி. தோனி ஒரு முழுமையான கிரிக்கெட்டர். சிறந்த பேட்ஸ்மேன், தலைசிறந்த கேப்டன், அபாரமான விக்கெட் கீப்பர் என அவர் சார்ந்த அனைத்து வேலைகளிலும் கிரிக்கெட்டில் வல்லவர் தோனி.

25

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) என 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.

35

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு 4 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல்லில் செம கெத்தான வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே திகழ்வதற்கு முக்கியமான காரணம் தோனி. நடப்பு சீசன் அவரது கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என்பதால் இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளார் தோனி.

45

சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல்லிலும் தோனி நிறைய சாதனைகளை படைத்துள்ளார். 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துவிட்டு, ஐபிஎல்லில் மட்டும் ஆடிவரும் தோனி, சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரமின் கேட்ச்சை பிடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

55

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் மஹீஷ் தீக்‌ஷனாவின் பவுலிங்கில் மார்க்ரமின் கேட்ச்சை தோனி பிடித்தார். இது டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக தோனியின் 208வது கேட்ச் ஆகும். இதன்மூலம் டி20யில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். குயிண்டன் டி காக் 207 கேட்ச்களுடன் 2ம் இடத்தில் உள்ளார். தினேஷ் கார்த்திக் 205 கேட்ச்களுடன் 3ம் இடத்தில் உள்ளார். தோனி கூடிய விரைவில் (இந்த சீசனில் கூட) ஓய்வு பெற்றுவிடுவார் என்பதால் தோனியின் சாதனையை நெருக்கமாக விரட்டிவரும் டி காக் கண்டிப்பாக முறியடித்துவிடுவார்.

Read more Photos on
click me!

Recommended Stories