ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன.
லக்னோவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட்பவுலர் அல்ஸாரி ஜோசஃப் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஆஃப்கானிஸ்தான் சைனாமேன் (இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்) பவுலரான நூர் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் யுத்விர் நீக்கப்பட்டும் சீனியர் ரிஸ்ட் ஸ்பின்னரான அமித் மிஷ்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோஹித் சர்மா.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் பதோனி, நவீன் உல் ஹக், அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்.