100 சதங்கள் சாதனை எனது 24 வருட கடின உழைப்பு; அதை கோலி முறியடித்தால் நான் வருத்தப்படுவேன் - சச்சின்!

First Published | Apr 22, 2023, 12:58 PM IST

எனது 100 சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடித்தால் நான் கண்டிப்பாக சந்தோஷப்படமாட்டேன் என்று கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

விராட் கோலி

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ள விராட் கோலி ஒவ்வொரு போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

விராட் கோலி

இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளில் விராட் கோலி 82 (நாட் அவுட்), 21, 61, 50, 6, 59 என்று மொத்தமாக 279 சேர்த்துள்ளார். எவ்வளவுக்கு எவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறாரோ அதே போன்ற அளவிற்கு தனது ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தி விளையாடி வருகிறார்.

Tap to resize

விராட் கோலி

வரும் 23 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான 32ஆவது போட்டி நடக்க இருக்கிறது. இந்தப் போட்டி பெங்களூரு மைதானத்தில் நடக்கிறது. இதுவரையில் ஒரு நாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் என்று மொத்தமாக 497 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 75 சதங்கள் வரையில் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரையும் சேர்த்தால் மொத்தமாக 80 சதங்கள் வரையில் விளாசியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 229 போட்டிகளில் 221 இன்னிங்ஸ் வரையில் ஆடியுள்ளார்.

விராட் கோலி

இந்த நிலையில், விராட் கோலி குறித்து கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டரான சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது #AskSachin என்ற ஹேஷ்டேக் மூலமாக அவரிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அது என்ன கேள்வி என்றால், உங்களது 100 சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடித்தால் உங்களது உணர்வு எப்படி இருக்கும் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

விராட் கோலி

அதற்கு பதிலளித்த சச்சின் டெண்டுல்கர் கூறியிருப்பதாவது: 100 சதங்கள் சாதனை என்பது அனைவராலும் முறியடிக்க முடியாத ஒன்று. ஆனால் விராட் கோலி வரும் 2027 உலகக் கோப்பை வரை விளையாடினால் அதை முறியடிப்பார். 100 சதங்கள் சாதனை எனது 24 வருட கடின உழைப்பு என்பதால் நான் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன். சாதனைகள் முறியடிக்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விராட் கோலி

சச்சினின் இந்த பதிவிற்கு பதிலளித்த விராட் கோலி கூறியிருப்பதாவது: உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. ஆனால் வங்கதேசம் மற்றும் இலங்கை சி அணியுடன் தொடரை பிசிசிஐ ஏற்பாடு செய்யாத வரை உங்கள் சாதனையை முறியடிக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். 

விராட் கோலி

மேலும் 2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பையையும், 2023 ஆம் ஆண்டின் WTC இறுதிப் போட்டியையும் இந்தியாவுக்கு பெற்றுக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

click me!