எம்.எஸ்.தோனி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான 29ஆவது போட்டி நேற்று சென்னை எம் எ சிதம்பரம் மைதானத்தில் நடந்தது.
எம்.எஸ்.தோனி
இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எம்.எஸ்.தோனி
இதில், தீக்ஷனா வீசிய 12.5 ஆவது ஓவரில் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் அடித்த பந்து அவரது பேட்டில் படவே, அது விக்கெட் கீப்பர் கைக்கு சென்றது. கீப்பர் யாரு, தோனியாச்சே, விடுவாரா லட்டு சாப்பிடுவது போன்று அலேக்காக கேட்ச் பிடித்துள்ளார்.
எம்.எஸ்.தோனி
இதன் மூலமாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் ஒரு கேட்ச் பிடித்ததன் மூலமாக 208 கேட்ச்கள் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஆவது இடத்தில் குயிண்டன் டி காக் (207 கேட்ச்), தினேஷ் கார்த்திக் (205 கேட்ச்), கம்ரான் அக்மல் (172 கேட்ச்), தினேஷ் ராம்தின் (150) என்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
எம்.எஸ்.தோனி
அதுமட்டுமின்றி, நேற்றைய போட்டியில் மாயங்க் அகர்வாலை ஸ்டெம்பிங்க் செய்துள்ளார். ஸ்டெம்பிற்கு பின்னால் நிற்பது தோனி என்று தெரிந்தும் கூட எப்படி அவரால் இறங்கி வர முடிந்தது என்று தெரியவில்லை. அதுவும் பாதி தூரத்திற்கு வந்துவிட்டார். அப்புறம் என்ன, பந்து தோனி கைக்கு செல்லவே எளிதாக ஸ்டெம்பிங் செய்துள்ளார்.
எம்.எஸ்.தோனி
கடசியாக வாஷிங்டன் சுந்தரை ரன் அவுட் செய்துள்ளார். இதன் மூலமாக ஒரே போட்டியில் ஒரு கேட்ச், ஒரு ரன் அவுட், ஒரு ஸ்டெம்பிங் என்று மூன்றையும் செய்து தோனி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.தோனி
சென்னை அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும், ஆகாஷ் சிங், தீக்ஷனா மற்றும் பதீரனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவருமே இந்த இலக்கை எட்டிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எம்.எஸ்.தோனி
ஆனால், ருத்துராஜ் கெய்க்வாட் 35 ரன்களில் ரன் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த ரகானேவும் 9 ரன்களில் வெளியேற, ராயுடுவும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். கான்வே மட்டும் கடைசி வரை நின்று வெற்றி தேடிக் கொடுத்தார். அவர் 77 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக சென்னை அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.தோனி
இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது. இதே போன்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றியும் 4ல் தோல்வியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.