தோனியின் வயது மற்றும் வலி காரணமாக அவர் நடுவரையில் களமிறங்காமல் கடைசியில் இறங்கி விளையாடி வருகிறார். பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் கூட ருத்துராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜின்க்யா ரகானே, ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரைத் தொடர்ந்து தான் தோனி களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.