ரோகித் சர்மா
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ஒவ்வொரு அணியும் புது புது வீரராக களமிறக்கி போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன.
ரோகித் சர்மா
ஆரம்பத்தில் வெற்றிக்காக போராடிய மும்பை இந்தியன்ஸ் இந்த 16ஆவது சீசனில் தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இதுவரையில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
ரோகித் சர்மா
அதோடு புள்ளிப் பட்டியலில் 6ஆவது இடத்திலும் உள்ளது. கடைசியாக ஹைதராபாத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் 25ஆவது போட்டியில் மோதின. இதில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 192 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாயங்க் அகர்வால் மட்டும் ஓரளவு கை கொடுக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.5 ஓவர்களில் 178 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ரோகித் சர்மா
நாளை இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையிலான 31ஆவது போட்டி நடக்கிறது. இந்தப் போட்டி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றின் 1000ஆவது போட்டி என்பதால் இந்தப் போட்டிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ரோகித் சர்மா
இந்த நிலையில், ரோகித் சர்மா ஒரு வைரம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ரோகித் சர்மா ஒரு வைரம். தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் அவரைவிட சிறந்தவர் என்று யாரும் இல்லை. அவர் எப்போதும் தனது பழைய நண்பர்களை நினைவு கூர்வார், அவர்களை மதிக்கிறார். நம்பமுடியாத ஒருவர். ஒவ்வொரு முறையும் நீங்கள் சந்திக்க விரும்பும் ஒருவர் என்று அவர் கூறியுள்ளார்.
ரோகித் சர்மா
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஹர்பஜன் சிங், அதன் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அவர், கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.