ரவீந்திர ஜடேஜா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான 29ஆவது போட்டி நேற்று சென்னை எம் எ சிதம்பரம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ரவீந்திர ஜடேஜா
இதில், சென்னை அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும், ஆகாஷ் சிங், தீக்ஷனா மற்றும் பதீரனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவருமே இந்த இலக்கை எட்டிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ரவீந்திர ஜடேஜா
ஆனால், ருத்துராஜ் கெய்க்வாட் 35 ரன்களில் ரன் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த ரகானேவும் 9 ரன்களில் வெளியேற, ராயுடுவும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். கான்வே மட்டும் கடைசி வரை நின்று வெற்றி தேடிக் கொடுத்தார். அவர் 77 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ரவீந்திர ஜடேஜா
இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார். இதைத் தொடர்ந்து பேசிய அவர் கூறியிருப்பதாவது: சென்னை சேப்பாக்கம் மைதானத்தைப் பார்க்கும் போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கும்.
ரவீந்திர ஜடேஜா
ஏனென்றால் கண்டிப்பாக மைதானம் திரும்பும். இந்தப் போட்டியை பொறுத்தவரையில் ஃபுல் லெந்தில் பந்து வீச வேண்டாம் என்பது மட்டும் திட்டமாக இருந்தது. அதன்படி பந்து வீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினோம். சென்னையில் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்கு இருக்கும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.