தோனியை விட புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் கிரிக்கெட் வீரர் இந்தியாவில் இருக்க முடியாது - ஹர்பஜன் சிங்!

First Published | Apr 22, 2023, 3:21 PM IST

எம்.எஸ்.தோனியை விட பெரிய கிரிக்கெட் வீரர் இந்தியாவில் இருக்க முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

எம்.எஸ்.தோனி

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ஒவ்வொரு அணியும் தொடர் வெற்றிக்காக போராடி வருகின்றது. தற்போது வரையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

எம்.எஸ்.தோனி

இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் 6 போட்டிகளில் 4ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது.

Tap to resize

எம்.எஸ்.தோனி

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், நாட்டில் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர்-பேட்டரான தோனியை விட "பெரிய கிரிக்கெட் வீரர்" இருக்க முடியாது என்று கூறினார். தோனியின் தலைமையின் கீழான இந்திய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றியது.

எம்.எஸ்.தோனி

அதுமட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை அணி 4 முறை சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. அதோடு 5 முறை 2ஆவது இடமும் பிடித்தது. இவ்வளவு ஏன் அண்மையில் ஒரே அணிக்காக 200 போட்டிகளில் கேப்டனாக இருந்த சாதனையும் தோனி படைத்துள்ளார். 200 போட்டிகளில் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.  

எம்.எஸ்.தோனி

இந்த நிலையில், தோனியை விட புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் இந்தியாவில் இருக்க முடியாது. தோனியை விட அதிக ரன்கள் எடுத்திருக்கலாம். இவ்வளவு ஏன், அதிக விக்கெட்டுகள் கூட எடுத்திருக்கலாம். ஆனால், அவருக்கு இருக்கும் அளவிற்கு யாருக்கும் ரசிகர்கள் இருக்கமாட்டார்கள் என்று ஹர்பஜன் சிங் ஸ்டார்ஸ்போர்ட்ஸில் கூறியுள்ளார்.

எம்.எஸ்.தோனி

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் தோனி ஒரு கேட்ச் பிடித்ததன் மூலமாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். நேற்றைய போட்டியில் ஒரு கேட்ச் பிடித்ததன் மூலமாக 208 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதோடு ஒரே போட்டியில் கேட்ச், ஸ்டெம்பிங் மற்றும் ரன் அவுட் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.

Latest Videos

click me!