முதல் முறையாக சேப்பாக்கத்தில் தோனியின் பெற்றோர்; இது தோனியின் கடைசி சீசனாக இருக்குமா?

Published : Apr 05, 2025, 07:18 PM ISTUpdated : Apr 06, 2025, 12:01 AM IST

MS Dhoni's Parents Watch CSK vs DC IPL 2025 : ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தங்களது மகன் தோனி விளையாடுவதை அவரது பெற்றோர் நேரில் வந்து கண்டு ரசித்துள்ளனர். ஆம், சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் CSK vs DC போட்டியை பார்க்க தோனியின் பெற்றோர் சேப்பாக்கம் வந்துள்ளனர்.

PREV
16
முதல் முறையாக சேப்பாக்கத்தில் தோனியின் பெற்றோர்; இது தோனியின் கடைசி சீசனாக இருக்குமா?
MS Dhoni's Parents Watch CSK vs DC IPL 2025

MS Dhoni's Parents Watch CSK vs DC IPL 2025 : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடம் பிடித்திருக்கிறது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மட்டுமின்றி தோனி ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

26
MS Dhoni's Parents Watch CSK vs DC IPL 2025 Match at Chepauk Stadium

ஐபிஎல் 2025 தொடரின் 17ஆவது லீக் போட்டி

தற்போது சென்னையின் கோட்டை என்று சொல்லப்படும் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2025 தொடரின் 17ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியைப் பார்க்க சினிமா பிரபலங்கள் வருவது வழக்கம். ஆனால், தோனியின் பெற்றோர் முதல் முறையாக போட்டியை பார்க்க நேரில் வந்துள்ளனர். இது தான் இப்போது ஆச்சரியமாக இருக்கிறது.

36
MS Dhoni Daughter

எம் எஸ் தோனியின் பெற்றோர்களான பான் சிங் மற்றும் தேவகி சிங்

மேலும், அவர்கள் வந்து போட்டியை பார்ப்பதை வைத்து இது தோனியின் கடைசி சீசனாக இருக்குமோ என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எம் எஸ் தோனியின் பெற்றோர்களான பான் சிங் மற்றும் தேவகி சிங் இருவரும் சேப்பாக்கம் வந்து தனது மகன் தோனி விளையாடுவதை கண்டு ரசித்து மகிழ்ந்துள்ளனர். ஒரு சில சீசன்களைத் தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்டாக தோனி இருந்து வருகிறார். தோனியை வைத்து சிஎஸ்கே அணியும் தங்களுக்கு அடையாளத்தை தேடிக் கொண்டுள்ளது.

46
MS Dhoni's Parents Watch CSK vs DC IPL 2025 Match

43 வயதாகும் தோனி

தற்போது 43 வயதாகும் தோனி 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதுவரையில் 268 போட்டிகளில் தோனி விளையாடியுள்ளார். இதில் மொத்தமாக 5293 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், அதிகபட்சமாக 84* ரன்கள் எடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் தோனி 2008 முதல் 2025 வரையில் 262 போட்டிகள் விளையாடியிருக்கிறார்.  

56
MS Dhoni's Parents Watch CSK vs DC IPL 2025 Match at Chepauk Stadium

43 வயதாகும் தோனி எப்போது ஓய்வு பெறுவார்?

சிஎஸ்கே அணிக்காக அதிக போடிகள் விளையாடிய வீரர் என்ற சாதனையையும், அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும் சிஎஸ்கே அணிக்காக 5 முறை டிராபியும் வென்று கொடுத்துள்ளார். தோனியின் வயது காரணமாக ஒவ்வொரு சீசனிலும் அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்ற விவாதம் நடந்து வரும் நிலையில் இன்று அவருடைய அப்பாவும், அம்மாவும் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் போட்டியை பார்க்க வந்தது யூகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

66
MS Dhoni Parents at Chepauk Stadium

சென்னை சூப்பர் கிங்ஸ்

இது ஒரு புறம் இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேஎல் ராகுல் 77 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். பின்னர், கடின இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கடைசியாக 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது வரையில் 18 ஓவர்கள் முடிவில் 130 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories