CSK vs DC IPL 2025: சிஎஸ்கேவை பந்தாடிய கேஎல் ராகுல் – டெல்லி கேபிடல்ஸ் 183 ரன்கள் குவிப்பு!

Published : Apr 05, 2025, 06:31 PM ISTUpdated : Apr 05, 2025, 06:36 PM IST

KL Rahul CSK vs DC IPL 2025 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 தொடரின் 17ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் கேஎல் ராகுலின் அதிரடியால் 183 ரன்கள் குவித்துள்ளது.

PREV
17
CSK vs DC IPL 2025: சிஎஸ்கேவை பந்தாடிய கேஎல் ராகுல் – டெல்லி கேபிடல்ஸ் 183 ரன்கள் குவிப்பு!
CSK vs DC IPL 2025, IPL 2025

சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

KL Rahul CSK vs DC IPL 2025 : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 தொடரின் 17ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 (IPL 2025 Live Score) ரன்கள் குவித்துள்ளது. இந்த சீசனில் முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடிய அடுத்தடுத்த 2 போட்டிகளில் தோல்வியை தழுவியது.

27
DC vs CSK, IPL 2025, Chennai Super Kings, Delhi Capitals

டெல்லி கேபிடல்ஸ் 183 ரன்கள்

இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதோடு சிஎஸ்கே மீது விமர்சனத்தை வைத்தது. இந்த நிலையில் தான் கண்டிப்பான வெற்றியை நோக்கி இன்றைய 17ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 183 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஜேக் ஃப்ரேஸர் மெக்கர்க் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.

37
Cricket, Sports News Tamil, Noor Ahmed

கே.எல்.ராகுல் 77 ரன்கள்

ஆனால் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கே.எல்.ராகுல் (KL Rahul) நிலைத்து நின்று விளையாடினார். அவர் 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார் (CSK vs DC 2025). சொல்லப்போனால், ஒரு போராடும் இன்னிங்ஸ். ராகுலின் அதிரடி காரணமாகவே கேப்பிடல்ஸ் அணி பெரிய ரன்களை குவிக்க முடிந்தது. அவருக்கு அபிஷேக் போரெல் தகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.

47
TATA IPL 2025, T20 Cricket

கேப்டன் அக்ஷர் படேல் 21 ரன்கள்

மேலும், கேப்டன் அக்ஷர் படேல் 21 ரன்கள் எடுத்தார். சமீர் ரிஸ்வி 20 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 12 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர். மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க முயற்சி செய்தனர். இது டெல்லி அணியின் கலவையில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். இதன் விளைவாக, டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது (CSK vs DC Live score).

57
MS Dhoni, KL Rahul, Axar Patel, Chennai Super Kings vs Delhi Capitals

கலீல் அகமது 2 விக்கெட்

சென்னை அணியில் (CSK) கலீல் அகமது (Khaleel Ahmed) 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா, நூர் அகமது மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். தற்போது ஐபில் 2025 தொடரின் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது.

67
Chennai Super Kings, Delhi Capitals, Ruturaj Gaikwad

புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம்

ஆனால், டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த சீசனைப் பொறுத்த வரையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு சாதகமாக அமைந்து வருகிறது. தற்போது சென்னைக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றியை நோக்கி விளையாடி வருகிறது.

77
CSK vs DC IPL 2025, IPL 2025

சென்னை சூப்பர் கிங்ஸ் 184 ரன்கள் வெற்றி இலக்கு:

184 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது வரையில் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில், ரச்சின் ரவீந்திரா 3, டெவோன் கான்வே 13, ருதுராஜ் கெய்க்வாட் 5, ஷிவம் துபே 18 என்று சிஎஸ்கே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories