MS Dhoni
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் எம்.எஸ். தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதில், இடையில் 2 ஆண்டுகள் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2016 மற்றும் 2017 என்று 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அந்த 2 ஆண்டுகள் தோனி ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணியில் இடம் பெற்று விளையாடினார்.
MS Dhoni 250th IPL T20 Match for CSK
இதையடுத்து மீண்டும் சிஎஸ்கே 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம் பெற்றது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் டிராபியை தட்டிச் சென்றது.
MS Dhoni, Cennai Super Kings
சிஎஸ்கே அணிக்காக தோனி 212 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். இவரது தலைமையிலான சிஎஸ்கே 128 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 82 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அதோடு, 2 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.
MS Dhoni CSK Score 4996 Runs
இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 29ஆவது லீக் போட்டியின் மூலமாக சிஎஸ்கே அணிக்காக எம்.எஸ்.தோனி இன்று தனது 250 ஆவது டி20 போட்டியில் விளையாடுகிறார். இந்தப் போட்டியில் அவர் பேட்டிங் செய்து 4 ரன்கள் எடுத்தால் சிஎஸ்கே அணிக்காக 5000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார். மேலும், சிஎஸ்கே அணிக்காக 23 அரைசதங்கள் அடித்துள்ளார்.
Chennai Super Kings
சிஎஸ்கே அணிக்காக 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய சுரேஷ் ரெய்னா, 5529 ரன்கள் குவித்துள்ளார். மேலும், இந்தப் போட்டியில் 4 ரன்கள் எடுப்பதன் மூலமாக தோனி ஒரு சாதனையை படைக்க இருக்கிறார்.
CSK, MS Dhoni 250th IPL Match
அதாவது, ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை விளையாடிய என்ற பெருமையை பெற்றுள்ள தோனி 4ஆவது இந்திய வீரராக தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் ஒரு அணிக்காக 5000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
MS Dhoni 250 T20 Match for CSK
இதற்கு முன்னதாக விராட் கோலி ஆர்சிபிக்காக 8006 ரன்களும், மும்பை அணிக்காக ரோகித் சர்மா 5470 ரன்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா 5529 ரன்களும் எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்தப் போட்டி தோனிக்கு மற்றொரு வகையிலும் சிறப்பு சேர்க்கிறது. அதாவது, ஒரு அணிக்காக விராட் கோலிக்கு பிறகு 250 அல்லது அதற்கு மேல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
MS Dhoni, Chennai Super Kings
தோனி ஒட்டுமொத்தமாக இதுவரையில் 255 (இந்த போட்டி அல்லாமல்) ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5121 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 84 (நாட் அவுட்) ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் 42 ரன்கள் எடுத்தால் 5162 ரன்கள் எடுத்த ஆர்சிபி முன்னாள் வீரர் ஏபி டிவிலியர்ஸ் சாதனையை முறியடித்து அதிக ரன்கள் எடுத்த 6ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.