MI vs CSK Live
மும்பை வான்கடே மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் போட்டி நடைபெற இருக்கிறது. இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்கிறது.
IPL 29th Match, MI vs CSK Live
மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகீஷ் தீக்ஷனாவிற்கு பதிலாக மதீஷா பதிரனா அணியில் இடம் பெற்றுள்ளார். ஆனால், அவர் போட்டியின் தன்மைக்கு ஏற்ப இம்பேக்ட் பிளேயராக களமிறங்க உள்ளார்.
Mumbai Indians vs Chennai Super Kings, 29th Match
மும்பை இந்தியன்ஸ்:
ரோகித் சர்மா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், முகமது நபி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஷ்ரேயாஸ் கோபால், ஜெரால்டு கோட்ஸி, ஜஸ்ப்ரித் பும்ரா, ஆகாஷ் மத்வால்.
Hardik Pandya and Ruturaj Gaikwad
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, முஷ்தாபிஜூர் ரஹ்மான்.
Mumbai Indians vs Chennai Super Kings, 29th Match
இந்தப் போட்டியில் முதல் முறையாக ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் கேப்டன்களாக இல்லாமல் களமிறங்குகின்றனர். இதற்கு முன்னதாக இரு அணிகளும் 36 ஐபிஎல் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் 20 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
Mumbai Indians vs Chennai Super Kings, 29th Match
கடந்த ஆண்டு நடந்த 2 போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் வான்கடே மைதானத்தில் மோதிய 11 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 7 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
MI vs CSK Live Score
ஒட்டுமொத்தமாக வான்கடே மைதானத்தில் நடந்த 80 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 30 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 4 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.
Mumbai Indians vs Chennai Super Kings, 29th Match
இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.
MI vs CSK 29th IPL Match
இன்று மும்பையின் ஹோம் மைதானத்தில் நடைபெறும் போட்டி என்பதால், இந்தப் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் பலம் வாய்ந்த அணி என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற 50 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.