நிக்கோலஸ் பூரனின் அதிரடியால் 161 ரன்கள் குவித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்!

First Published Apr 14, 2024, 5:51 PM IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 28ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்தது.

KKR vs LSG, IPL 28th Match, Eden Gardens

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 28ஆவது லீக் போட்டி தற்போது ஈடன் கார்டனில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் ரிங்கு சிங் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Lucknow Super Giants

இதே போன்று லக்னோ அணியில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேவ்தத் படிக்கல் மற்றும் நவீன் உல் ஹக் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷமர் ஜோசஃப் மற்றும் தீபக் கூட இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஷமர் ஜோசஃப் இன்றைய போட்டியின் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். மேலும், மோசின் கானும் அணியில் இடம் பெற்றுள்ளார்.

Kolkata Knight Riders

லக்னோ அணியில் கேஎல் ராகுல் மற்றும் குயீண்டன் டி காக் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், டி காக் 10 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தீபக் ஹூடா 8 ரன்களில் நடையை கட்டினார். இதன் மூலமாக பவர்பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து லக்னோ தடுமாறியது.

Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match

அதன் பிறகு கேஎல் ராகுல் மற்றும் ஆயுஷ் பதோனி இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர். இதில் ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 10 ரன்களில் வெளியேறினார். ஆயுஷ் பதோனி 29 ரன்களில் ஆட்டமிழந்தனர். அப்போது லக்னோ அணி 14.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்து தடுமாறியது. கடைசியாக வந்த நிக்கோலஸ் பூரன் 4 சிக்ஸ், 2 பவுண்டரி உள்பட 45 ரன்கள் சேர்த்துக் கொடுத்து ஆட்டமிழந்தார்.

KKR vs LSG, IPL 28th Match

இதன் மூலமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரூ.23.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார் 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். வைபவ் அரோரா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெடுகள் எடுத்தனர்.

click me!