டாஸ் வென்ற கேகேஆர் பவுலிங் – தேவ்தத் படிக்கலை கழற்றிவிட்டு நல்ல முடிவு எடுத்த லக்னோ!

First Published Apr 14, 2024, 3:37 PM IST

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக இன்று நடக்கும் 28ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 28ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில், டாஸ் வென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் ரிங்கு சிங் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Indian Premier League 2024

இதே போன்று லக்னோ அணியில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேவ்தத் படிக்கல் மற்றும் நவீன் உல் ஹாக் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷமர் ஜோசஃப் மற்றும் தீபக் கூட இருவரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். இதில் ஷமர் ஜோசஃப் இன்றைய போட்டியின் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.

IPL 2024

மேலும், மோசின் கானும் அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த சீசனில் லக்னோ விளையாடிய 5 போட்டிகளில் 3ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.

KKR vs LSG, IPL 2024

இதே போன்று கொல்கத்தா விளையாடிய 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று 2ஆவது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 3 போட்டிகளில் 3 போட்டிகளிலும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது.

Indian Premier League 2024

இந்த சீசனில் கடைசியாக நடந்த 2 போட்டிகளிலும் அவே அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் இன்றைய போட்டி கொல்கத்தாவில் நடைபெறும் நிலையில், இதில், லக்னோ ஜெயிப்பதற்கு 60 சதவிகித வாய்ப்புக இருக்கிறது. கொல்கத்தா ஜெயிப்பதற்கு 40 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Kolkata Knight Riders vs Lucknow Super Giants, IPL 28th Match

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

குயீண்டன் டி காக், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), தீபக் கூடா, ஆயுஷ் பதோனி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், குர்ணல் பாண்டியா,ரவி பிஷ்னோய், மோசின் கான், ஷமர் ஜோசஃப், யாஷ் தாக்கூர்.

KKR vs LSG, IPL 28th Match

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.

click me!