Published : Oct 12, 2024, 02:49 PM ISTUpdated : Oct 12, 2024, 06:25 PM IST
MS Dhoni New Hairstyle Makes His Look 10 Years Younger: ஐபிஎல் 2025 தொடருக்கு முன்னதாக தோனி தனது நீண்ட தலைமுடியை வெட்டி புதிய லுக்கிற்கு மாறியுள்ளார். இந்த புதிய ஹேர்ஸ்டைல் அவருக்கு 10 வயது குறைவாகக் காட்டுகிறது.
MS Dhoni, CSK, MS Dhoni New Hairstyle Makes His Look 10 Years Younger
MS Dhoni New Hairstyle Makes His Look 10 Years Younger: எப்போதுமே ஸ்டைல் டிரெண்ட்செட்டராக இருப்பவர் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி. நீண்ட தலைமுடியுடன் தோன்றிய தோனி தற்போது ஐபிஎல் 2025 தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் தனது நீண்ட தலைமுடியை வெட்டி புதிய லுக்கிற்கு மாறியுள்ளார். அதுவும் 10 வயது குறைந்து யூத்தாக தோற்றமளிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக புதிய ஸ்டைலில் தோன்றும், அதே ஸ்டைலில் தான் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்.
25
MS Dhoni, Chennai Super Kings
இதுவரையில் நடைபெற்ற 17 சீசன்களிலும் தோனி புதிய புதிய ஸ்டைலில் தான் தோன்றியிருக்கிறார். ஒரு சீசனில் கொஞ்ச முடியும் தோனிய தோனி கடந்த சீசனில் பிளாக் அண்ட் பிரவுன் லுக்கில் அதிக ஹேர்ஸ்டைலுடன் களத்திற்கு வந்தார். தற்போது அந்த லுக்கிலிருந்து வேறொரு லுக்கிற்கு மாறியுள்ளார். அந்த லுக் அவரை வேறு மாதிரி காட்டுகிறது. அதாவது, 10 வயது என்ன, 20 வயது குறைத்து யூத்தாக காட்டுகிறது.
இதற்கு எல்லாம் முக்கிய காரணம் தோனியின் ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கிம். தோனியின் இந்த புதிய தோற்றத்திற்கு அவர் தான் காரணம். தோனிக்கு 10 என்ன 20 வயது குறைந்திருப்பது போன்று ஒரு ஹேர்ஸ்டைலை கொடுத்து அழகாக காட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களும் இனி தோனியின் லுக்கை பாலோ பண்ண தொடங்கிவிடுவார்கள். இந்த லுக் தோற்றத்திற்கு தோனி ரூ.1 லட்சம் வரையில் செலவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
எப்போது தோனியை பார்ப்போம் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு தற்போது அவரது இந்த ஸ்டைலிஷான லுக் அவர்களுக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது. கடந்த ஐபிஎல் சீசனோடு தோனி ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த சீசனை வெற்றிகரமாக முடித்த நிலையில் 18ஆவது ஐபிஎல் சீசனுக்கும் தன்னை தயார்படுத்தி வருகிறார். 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், தோனி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.