Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th IPL 2024 Match
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 46ஆவது லீக் போட்டி எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது.
Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th IPL 2024 Match
ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ரஹானே 9 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேரில் மிட்செல் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், மிட்செல் இந்த சீசனில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். அவர், 32 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th IPL 2024 Match
இவரைத் தொடர்ந்து கெய்க்வாட் உடன் இணைந்த ஷிவம் துபே அதிரடியாக விளையாடினார். இதில், கெய்க்வாட் 98 ரன்கள் எடுத்திருந்த போது தமிழக வீரர் நடராஜன் ஓவரில் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் 54 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 98 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 39 ரன்களும், அடுத்து வந்த தோனி 5 ரன்களும் எடுக்க, சிஎஸ்கே 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது.
MS Dhoni 150th IPL Win
பின்னர் கடின இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிரடியாக தொடங்கிய டிராவிஸ் ஹெட் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அன்மோல்ப்ரீத் சிங் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அபிஷேக் சர்மாவும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th IPL 2024 Match
நிதிஷ் ரெட்டி 15, எய்டன் மார்க்ரம் 32, ஹென்ரிச் கிளாசென் 20, அப்துல் சமாத் 19, பேட் கம்மின்ஸ் 5, ஷாபாஸ் அகமது 7 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
CSK vs SRH, 46th IPL 2024 Match
இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக தோனி தனது 150ஆவது ஐபிஎல் வெற்றியை பெற்றுள்ளார். இதுவரையில் தோனி விளையாடிய 259 ஐபிஎல் போட்டிகளில் 5178 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 24 அரைசதங்கள் அடங்கும்.
Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th IPL 2024 Match
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டும், மதீஷா பதிரனா, முஷ்தாபிஜூர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
MS Dhoni 150th IPL Match
இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திலிருந்து தற்போது 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3ஆவது இடத்திலிருந்து 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 4ஆவது இடத்திலிருந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 5ஆவது இடத்திலிருந்த டெல்லி கேபிடல்ஸ் 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.