கோலி, சாஸ்திரியின் குறுக்குபுத்தி இந்திய வீரர்கள் அனைவருக்கும் தெரியும்..! டீமையே நாசமாக்கி வச்சுருக்காங்க

First Published Dec 6, 2020, 4:43 PM IST

வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களது திறமையை நிரூபிக்கவும், நிரூபித்த வீரர்கள் சொதப்பினால், அவர்கள் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவதற்கும் போதிய அவகாசம் கொடுக்காமல் வீரர்களை எடுப்பதும் கழட்டிவிடுவதுமாக இருக்கும் இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் முகமது கைஃப்.
 

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, அணி காம்பினேஷனை தேவையில்லாமல் மாற்றுவது, ஒருசில போட்டிகளில் சொதப்பும் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்பளிக்காமல் கழட்டிவிடுவது ஆகிய கோலியின் செயல்பாடுகள் தொடர் விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது. கோலியின் கேப்டன்சியை முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் பலமுறை விமர்சித்தனர், விமர்சித்துவருகின்றனர்.
undefined
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் டி20 தொடரிலும் அதே தவறை செய்தார் கோலி. ஒருநாள் தொடரில் சரியாக ஆடாத ஷ்ரேயாஸ் ஐயரை, முதல் டி20 போட்டியில் அணியில் எடுக்கவில்லை. இன்று சிட்னியில் நடந்துவரும் 2வது டி20 போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் முதல் டி20 போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரை கோலி நீக்கியதன் விளைவாக கோலியை மிகக்கடுமையாக சாடினார் சேவாக்.
undefined
நீங்கள்(கோலி) சரியாக ஆடாதபோதிலும், உங்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்பளித்த தோனியை நீங்கள் இன்றைக்கு நினைவுகூருவதை போல, இப்போதைய இந்திய அணியில் உங்களை(கோலியை) நினைவுகூர ஒரு வீரர் உண்டா என்று கேள்வி எழுப்பி, கடுமையாக விமர்சித்தார் சேவாக்.
undefined
இந்நிலையில், முகமது கைஃபும் கோலியை கடுமையாக விமர்சித்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயரை முதல் டி20 போட்டியில் நீக்கியது குறித்து கருத்து தெரிவித்த முகமது கைஃப், ஷ்ரேயாஸ் ஐயர் தான் இந்திய அணியின் 4ம் வரிசை வீரராக அண்மைக்காலத்தில் ஆடிவருகிறார். அவர்தான் இந்திய அணிக்கு போட்டிகளை முடித்து கொடுத்து வருகிறார். நியூசிலாந்து தொடரில் நன்றாகத்தான் ஆடினார்.
undefined
ஆனால் ஒருநாள் போட்டிகளில் ஒரு சில இன்னிங்ஸ்களில் சரியாக ஆடவில்லை என்பதற்காக அவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான அணியில் எடுக்கவில்லை. இந்திய அணியின் கலாச்சாரம் இப்போது இப்படித்தான் இருக்கிறது. ஒருசில போட்டிகளில் சரியாக ஆடாவிட்டால், கோலியும் சாஸ்திரியும் சேர்ந்து தங்களை தூக்கி எறிந்துவிடுவார்கள் என்ற எதார்த்தத்தை வீரர்களும் நன்கு புரிந்தே வைத்துள்ளனர். தாதா கேப்டனாக இருந்த காலத்தில் எங்களது திறமையை நிரூபிக்க போதிய வாய்ப்பளித்து எங்களை வளர்த்துவிட்டார் என்று கைஃப் தெரிவித்தார்.
undefined
click me!