#AUSvsIND முதல் விக்கெட்டை போணி செய்த நடராஜன்..! மேத்யூ வேட் காட்டடி அரைசதம்

First Published Dec 6, 2020, 2:26 PM IST

ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை நடராஜன் போணி செய்தார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் மனீஷ் பாண்டேவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயரும், கன்கஷனில் இருக்கும் ஜடேஜாவிற்கு பதிலாக சாஹலும், ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டு ஷர்துல் தாகூரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
undefined
இந்திய அணி:கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், சாஹல், டி.நடராஜன்.
undefined
ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஃபின்ச் ஆடாததால், மார்கஸ் ஸ்டோய்னிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஃபின்ச் ஆடாததால் மேத்யூ வேட் கேப்டன்சி செய்கிறார். டாஸ் வென்ற கோலி, ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஷார்ட்டும், மேத்யூ வேடும் களமிறங்கினர்.
undefined
மேத்யூ வேட் தொடக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பித்தார். தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் ஆகியோரின் பவுலிங்கில் பவுண்டரிகளை விளாசிய மேத்யூ வேட், 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 25 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஷார்ட் நிதானமாக ஆடிக்கொண்டிருக்க, ஐந்தாவது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய நடராஜன், ஷார்ட்டை 9 ரன்களுக்கு வீழ்த்தினார். இதையடுத்து மேத்யூ வேடுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.
undefined
click me!