#AUSvsIND 2வது டி20: நீ சரிப்பட்டு வரமாட்ட கிளம்பு தம்பி.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்..!

First Published Dec 6, 2020, 1:49 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று சிட்னியில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கன்கஷனில் இருக்கும் ஜடேஜாவிற்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டுள்ளார். மனீஷ் பாண்டே நீக்கப்பட்டு, ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். முகமது ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டு ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
இந்திய அணி:கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், சாஹல், டி.நடராஜன்.
undefined
ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஃபின்ச் ஆடவில்லை. அதனால் மேத்யூ வேட் கேப்டன்சி செய்கிறார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் அணியில் சேர்க்கப்பட்டு, ஷார்ட்டுடன் அவர் தொடக்க வீரராக இறங்குகிறார். மிட்செல் ஸ்டார்க்கிற்கு ஓய்வளிக்கப்பட்டு, ஆண்ட்ரூ டை சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
ஆஸ்திரேலிய அணி:ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், ஹென்ரிக்ஸ், மேத்யூ வேட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), டேனியல் சாம்ஸ், சீன் அபாட், மிட்செல் ஸ்வெப்சன், ஸாம்பா, ஆண்ட்ரூ டை.
undefined
click me!