ஐபிஎல்லில் மட்டமா ஆடிட்டு ஆஸ்திரேலியாவுக்காக அசத்தும் மேக்ஸ்வெல்..! காரணத்தை அம்பலப்படுத்திய முன்னாள் வீரர்

First Published Dec 10, 2020, 3:31 PM IST

ஐபிஎல்லில் படுமோசமாக சொதப்பிய மேக்ஸ்வெல், அடுத்த ஒருசில வாரங்களில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடும்போது அபாரமாக பேட்டிங் ஆடியது அனைவரையுமே ஆச்சரியத்திலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சார்ந்தவர்களை கடுப்புக்கும் உள்ளாக்கியது.
 

ஐபிஎல்லுக்கு முன் ஆஸ்திரேலிய அணிக்காக அபாரமாக ஆடி சதமடித்து வெற்றியை தேடிக்கொடுத்த கையோடு ஐபிஎல்லில் ஆடவந்த மேக்ஸ்வெல், பஞ்சாப் அணிக்காக சரியாக ஆடவில்லை. மேக்ஸ்வெல் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து அவரை ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்து, அனைத்து போட்டிகளிலும் வாய்ப்பளித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. ஆனால் 11 இன்னிங்ஸ்களில் வெறும் 15.42 என்ற சராசரி மற்றும் 101.88 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தமாகவே வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.
undefined
ஆனால் ஆஸ்திரேலியாவுக்காக ஆடும்போது மிக அபாரமாக ஆடி அசத்தினார் மேக்ஸ்வெல். இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் மிகச்சிறப்பாக ஆடி ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான இன்னிங்ஸை ஆடினார். 3 ஒருநாள் போட்டிகளில் 83.50 என்ற சராசரியுடனும் 194.18 என்ற ஸ்டிரைக் ரேட்டுடனும் 167 ரன்களை குவித்தார் மேக்ஸ்வெல். டி20 போட்டிகளிலும் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார்.
undefined
இந்நிலையில், ஐபிஎல்லில் சொதப்பலாகவும் ஆஸ்திரேலிய அணிக்காக அபாரமாகவும் ஆடியது குறித்து முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய முகமது கைஃப், ஐபிஎல்லில் மேக்ஸ்வெல் தெறிக்கவிடுவார் என்று அனைவரும் நம்பினர். ஓபனிங், 3 மற்றும் 4ம் வரிசை என அனைத்து வரிசைகளிலும் ஆடவைக்கப்பட்டார். மேக்ஸ்வெல்லுக்கு ஐபிஎல்லில் அதிக அழுத்தம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஆடமுடியும். எனவே வெளிநாட்டு வீரர்களுக்கு இடையேயான போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
undefined
ஆனால் ஐபிஎல் முடிந்து, ஆஸ்திரேலிய அணிக்காக ஆடும்போது, வேற லெவலில் ஆடுகிறார் மெக்ஸ்வெல். ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் மட்டுமல்லாது அவர் எந்த பந்தை எந்த திசையில் அடிக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அதை சரியாக அடித்தார். எனவே மேக்ஸ்வெல்லின் திறமையில் எந்த குறையும் இல்லை. ஐபிஎல்லில் அவரது மனநிலை தான் பிரச்னையாக இருக்கிறது என்று கைஃப் தெரிவித்துள்ளார்.
undefined
click me!