#AUSvsIND முதல் டெஸ்ட்: வார்னர் இல்லை; அந்த பையன் ஆடுறத பார்க்கத்தான் ஆவலா இருக்கேன்..! ஷேன் வார்னின் ஆடும் 11

First Published Dec 10, 2020, 2:36 PM IST

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி எந்தெந்த வீரர்களுடன் களமிறங்கலாம் என்று ஷேன் வார்ன் தனது ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும் டி20 தொடரை இந்திய அணியும் வென்ற நிலையில், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் வரும் 17ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கிறது.
undefined
இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து டேவிட் வார்னர் காயத்தால் நீக்கப்பட்டுள்ள நிலையில், ஜோ பர்ன்ஸூடன், இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி அல்லது மார்கஸ் ஹாரிஸை தொடக்க வீரராக இறக்கலாம் என்று ஷேன் வார்ன் கருத்து தெரிவித்துள்ளார். ஸ்மித், லபுஷேன், டிராவிஸ் ஹெட் ஆகியோர் மிடில் ஆர்டர் வீரர்கள்.
undefined
ஆறாம் வரிசையில், 21 வயது இளம் வீரர் கேமரூன் க்ரீனை பார்க்க ஆவலாக இருப்பதாக வார்ன் தெரிவித்துள்ளார். இந்தியா ஏ அணிக்கு எதிரான 3 நாள் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி சார்பில் க்ரீன் சதமடித்து அசத்திய நிலையில், முதல் டெஸ்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளதால், பிங்க் பந்தில் க்ரீன் ஆடுவதை பார்க்க ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேத்யூ வேடுக்கும் அந்த பேட்டிங் ஆர்டரில் ஒரு ஆப்சன் கொடுத்திருக்கிறார் வார்ன். வேட் அல்லது க்ரீன் ஆகிய இருவரில் ஒருவர் என்று தெரிவித்துள்ளார். ஃபாஸ்ட் பவுலர்கள் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் மற்றும் ஸ்பின்னர் நேதன் லயன்.
undefined
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு ஷேன் வார்ன் தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலியா ஆடும் லெவன்:ஜோ பர்ன்ஸ், வில் புகோவ்ஸ்கிமார்கஸ் ஹாரிஸ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மேத்யூ வேட்கேமரூன் க்ரீன், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், நேதன் லயன்.
undefined
click me!