இலங்கை மற்றும் இந்தியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை சூடு பிடித்துள்ளது. லீக் சுற்று முடிவடைந்ததை தொடர்ந்து நாளை (பிப்ரவரி 21) முதல் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 சுற்று போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை வரும் 22ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.
இந்தியா மீண்டும் கோப்பை வெல்லும்
இந்திய அணியை பொறுத்தவரை டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் பலமாக உள்ளதால் இந்த முறையும் இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் என முன்னாள் வீரர்கள் பலரும் கணித்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார்.