மும்பை இந்தியன்ஸ் மானத்த காப்பாத்துவாருன்னு பாத்தா புஷ்ஷுன்னு டக் அவுட்டான சூர்யகுமார் யாதவ்!

First Published | Apr 7, 2024, 4:27 PM IST

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 20ஆவது லீக் போட்டியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடிய சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Suryakumar Yadav

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்தார்.

MI vs DC, IPL 2024

இந்தப் போட்டியின் மூலமாக சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த 3 போட்டிகளில் இடம் பெறவில்லை. அதன்படி ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

Tap to resize

Mumbai Indians: Suryakumar Yadav

இருவரும் அதிரடியாக தொடங்கினர். இதில் ரோகித் சர்மா 27 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 49 ரன்கள் எடுத்த நிலையில், அக்‌ஷர் படேல் பந்தில் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார்.

Suryakumar Yadav, Mumbai Indians

கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பிறகு டி20 போட்டிக்கு திரும்பிய சூர்யகுமார் யாதவ் பொறுமையாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வந்த முதல் பந்திலேயே யார்க்கரில் ஆட்டமிழக்க பார்த்தார்.

Suryakumar Yadav

ஆனால், பந்து லெக் ஸைடில் சென்றதால் தப்பித்தார். ஆண்ட்ரிச் நோர்ட்ஜேயின் 2ஆவது பந்தில் மிட் ஆன் திசையில் தூக்கி அடித்தார். அங்கு பீல்டிங்கில் நின்றிருந்த சப்ஸ்டிடியூட் வீரர் ஜேக் ஃப்ரேசரிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

Latest Videos

click me!