மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் MI vs DC போட்டியின் போது ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் சாதனை படைக்க காத்திருக்கின்றனர்.
வான்கடே மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
27
Mumbai Indians vs Delhi Capitals
டெல்லி அணியில் ஜே ரிச்சர்ட்சன் மற்றும் குமார் குஷாக்ரா இருவரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுமித் குமாருக்கு பதிலாக லலித் யாதவ்வும் இடம் பெற்றுள்ளார். இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
37
MI 20th IPL Match 2024
அதன்படி, நமன் திர்ருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றுள்ளார். இளம் வேகப்பந்து வீச்சாளர் குவெனா மபாகாவிற்கு பதிலாக ரோமாரியா ஷெஃப்பர்டு மற்றும் டிவால்டு பிரேவிஸிற்கு பதிலாக முகமது நபி அணியில் இடம் பெற்றுள்ளார்.
47
Delhi Capitals vs Mumbai Indians, IPL 2024
இன்றைய போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் டிரெண்ட் முறையில் பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு 60 சதவிகித வாய்ப்பு உள்ளது. மேலும், அவே அணி வெற்றி பெறுகிறது என்ற ஐபிஎல் டிரெண்ட் முறையில் பார்த்தால் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 40 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது.
இன்றைய போட்டியில் சாதிக்க காத்திருக்கும் வீரர்கள்:
ரிஷப் பண்ட் இன்றைய போட்டியில் 10 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடந்து சாதனை படைப்பார்.
ரோகித் சர்மா ஒரு கேட்ச் பிடித்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 கேட்சுகள் பிடித்த வீரர் என்ற சாதனை படைப்பார். நேற்று நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ஒரு கேட்ச் பிடித்து 110 கேட்சுகள் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்தால் 150 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனை படைப்பார்.
ஆண்ட்ரிச் நோர்ட்ஜே 2 விக்கெட்டுகள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனை படைப்பார்.