வான்கடே மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
28
Delhi Capitals
டெல்லி அணியில் ஜே ரிச்சர்ட்சன் மற்றும் குமார் குஷாக்ரா இருவரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுமித் குமாருக்கு பதிலாக லலித் யாதவ்வும் இடம் பெற்றுள்ளார். இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
38
Mumbai Indians vs Delhi Capitals 20th Match, IPL 2024
அதன்படி, நமன் திர்ருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றுள்ளார். இளம் வேகப்பந்து வீச்சாளர் குவெனா மபாகாவிற்கு பதிலாக ரோமாரியா ஷெஃப்பர்டு மற்றும் டிவால்டு பிரேவிஸிற்கு பதிலாக முகமது நபி அணியில் இடம் பெற்றுள்ளார்.
48
Mumbai Indians vs Delhi Capitals
இந்த தொடரில் இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஆனால், டெல்லி கூட ஒரு போட்டியில் அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.
58
Mumbai Indians vs Delhi Capitals
இன்றைய போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் டிரெண்ட் முறையில் பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு 60 சதவிகித வாய்ப்பு உள்ளது. மேலும், அவே அணி வெற்றி பெறுகிறது என்ற ஐபிஎல் டிரெண்ட் முறையில் பார்த்தால் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 40 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது.