கோலி முதல் பட்லர் வரையில் RR vs RCB போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகளின் பட்டியல்!

First Published | Apr 7, 2024, 9:51 AM IST

ஜெய்ப்பூரில் RCB அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் 19ஆவது போட்டியில் RR 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

RR vs RCB, 19th IPL 2024 Match

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையிலான ஐபிஎல் தொடரின் 19ஆவது லீக் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru 19th Match

பார்ட்னர்ஷிஃப்:

ஆர்சிபி அணியில் பாப் டூ ப்ளெசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்தனர். மேலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 1432 ரன்கள் குவித்துள்ளது.

Tap to resize

RR vs RCB Live IPL 19th Match

விராட் கோலி சாதனைகள்:

ஐபிஎல் கிரிக்கெட்டில் 7500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த சீசனில் சதம் விளாசி, தனிநபராக அதிகபட்சமாக 113* ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.

5ஆவது போட்டியில் விளையாடி விராட் கோலி 21, 77, 83*, 22, 113* என்று மொத்தமாக 316 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப்பை தன் வசப்படுத்தியிருக்கிறார்.

IPL 2024 19th Match

பின்னர் 184 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், சாம்சன் 69 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்தார். மேலும், அணியையும் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் ராஜஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Jos Butler

RR vs RCB போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள்:

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர் ஆர் அணியில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள்:

11 – ஜோஸ் பட்லர் (இன்றைய போட்டி உள்பட)

10 – அஜிங்க்யா ரஹானே

9 – யூசுப் பதான்

9 – ஷேன் வாட்சன்

8 – சஞ்சு சாம்சன்

Virat Kohli

ஒரு பீல்டராக ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்தவர்கள்:

110 – விராட் கோலி

109 – சுரேஷ் ரெய்னா

103 – கிரான் போலார்டு

99 – ரோகித் சர்மா

98 – ஷிகர் தவான்

98 – ரவீந்திர ஜடேஜா

Jos Butler

ஐபிஎல் கிரிக்கெட்டில் தனிநபர் சதங்கள்:

2 - RCB vs GL, பெங்களூரு, 2016

2 - SRH vs RCB, ஹைதராபாத், 2019

2 - SRH vs RCB, ஹைதராபாத், 2023

2 - RCB vs GT, பெங்களூரு, 2023

2 - RR vs RCB, ஜெய்ப்பூர், 2024

Virat Kohli

ஐபிஎல் தோல்வியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்:

3 – விராட் கோலி

2 – ஹசீம் ஆம்லா

2 – சஞ்சு சாம்சன்

நேற்று நடந்த போட்டியில் விராட் கோலி 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்திருந்தாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோல்வி அடைந்துள்ளது

RR vs RCB, IPL 2024

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர் ஆர் அணியில் அதிக ரன்கள்:

3389 – சஞ்சு சாம்சன்

2831 – ஜோஸ் பட்லர்

2810 – அஜிங்க்யா ரஹானே

2372 – ஷேன் வாட்சன்

1276 – ராகுல் டிராவிட்

Virat Kohli

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியல்:

8 – விராட் கோலி

6 – கிறிஸ் கெயில்

6 – ஜோஸ் பட்லர்

4 – கேஎல் ராகுல்

4 – டேவிட் வார்னர்

4 – ஷேன் வாட்சன்

Sanju Samson

ஆர் ஆர் அணியில் அதிக பார்ட்னர்ஷிப்:

155 – ஜோஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் vs DC, மும்பை, 2022

152* - சஞ்சு சாம்சன் – பென் ஸ்டோக்ஸ் vs MI, அபுதாபி, 2020

150 – ஜோஸ் பட்லர் – சஞ்சு சாம்சன் vs SRH, டெல்லி, 2021

148 - ஜோஸ் பட்லர் – சஞ்சு சாம்சன் vs RCB, ஜெய்பூர், 2024

144 – ஷேட் வாட்சன் – அஜிங்க்யா ரஹானே vs CSK, அகமதாபாத், 2015

138 - Jos Buttler & Sanju Samson vs SRH, Jaipur, 2023

Virat Kohli

ஜெய்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்

215 - SRH vs RR, 2023

197 - RR vs Deccan Chargers, 2012

192 - DC vs RR, 2019

184 - RR vs RCB, 2024

179 - RR vs PWI, 2013

இதற்கு முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஆர் ஆர் 191 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது.

RR vs RCB, IPL 2024

100ஆவது ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்:

103*(60) – கேஎல் ராகுல் (LSG) vs MI, பிரபோர்ன், 2022

100*(58) – ஜோஸ் பட்லர் (RR) vs RCB, ஜெய்பூர், 2024

86(59) – பாப் டூ ப்ளெசிஸ் (CSK) vs KKR, துபாய், 2021 இறுதிப் போட்டி

69(38) – டேவிட் வார்னர் (SRH) vs RCB, பெங்களூரு, 2016 இறுதிப் போட்டி

59(41) – முரளி விஜய் (PBKS) vs RPS, விசாகப்பட்டினம், 2016

Yuzvendra Chahal

யுஸ்வேந்திர சஹால்:

இந்த சீசனில் 4 போட்டிகளில் விளையாடிய யுஸ்வேந்திர சஹால் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரருக்கான பர்பிள் கேப் பெற்றுள்ளார்.

Latest Videos

click me!