Sanju Samson
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 19ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது பிங்க் நிற ஜெர்சியில் விளையாடியது. மேலும், இந்தப் போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் 6 வீடுகள் வீதம் ராஜஸ்தான் ராயல்ஸ் முழுவதும் சோலார் பேனல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Jos Buttler and Sanju Samson
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். மேலும், ஆர்சிபி அணி முதல் விக்கெட்டிற்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்தது.
IPL 2024, 19th League Match
இந்தப் போட்டியில் விராட் கோலி 7500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், இந்த சீசனில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 8 சதம் விளாசியுள்ளார்.
Royal Challengers Bengaluru
இதைத் தொடர்ந்து 184 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சஞ்சு சாம்சன் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Virat Kohli 113 Runs
ரியான் பராக் 4, துருவ் ஜூரெல் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியில் ஷிம்ரன் ஹெட்மயர் களமிறங்கி 11 ரன்கள் எடுக்க, தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி ஆர் ஆர் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். அதுமட்டுமின்றி 100ஆவது ஐபிஎல் போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்தார். பட்லர் 58 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
RR vs RCB
கடைசியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 ஒன் இடம் பிடித்துள்ளது. இதே போன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடம் பிடித்துள்ளது.