Virat Kohli Orange Cap
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 19ஆவது லீக் போட்டி தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடி வருகின்றனர்.
Virat Kohli
மேலும், இந்தப் போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் 6 வீடுகள் வீதம் ராஜஸ்தான் முழுவதும் சோலார் பேனல் அமைக்கப்பட இருக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் பாப் டூ ப்ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 125 ரன்கள் குவித்தது. மேலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 1432 ரன்கள் குவித்துள்ளது.
Virat Kohli 7500 Runs, Partnerships, 100 Runs
பாப் டூ ப்ளெசிஸ் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 1, சௌரவ் சௌகான் 9 ரன்களில் வெளியேறினர். அதிரடியாக விளையாடிய விராட் கோலி 34 ரன்கள் எடுத்திருந்த போது ஐபிஎல் கிரிக்கெட்டில் 7500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதோடு, 67 பந்துகளில் சதம் அடித்ததன் மூலமாக இந்த சீசனில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
Virat Kohli 113 Runs
அதோடு, 8ஆவது ஐபிஎல் சதத்தையும் பூர்த்தி செய்துள்ளார். இது விராட் கோலியின் 9ஆவது டி20 சதம் ஆகும். இதற்கு முன்னதாக டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் கிறிஸ் கெயில் (22), பாபர் அசாம் (11), ரோகித் சர்மா (7) ஆகியோர் முறையே 1, 2 மற்றும் 4ஆவது இடங்களை பிடித்துள்ளனர்.
Virat Kohli 100 Runs
ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சதம் பட்டியல்:
113* vs RCB, 2024
113 vs PBKS, 2016
109 vs Gujarat Lions, 2016
108* vs RPS, 2016
101* vs GT, 2023
100* vs GL, 2016
100 vs KKR, 2019
100 vs SRH, 2023
Virat Kohli, RR vs RCB Live Score
மேலும், இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி 113 ரன்கள் எடுத்து படைத்துள்ளார். அதோடு, 72 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இந்த சீசனில் 2ஆவது முறையாக ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். தற்போது 5ஆவது போட்டியில் விளையாடி வரும் விராட் கோலி 21, 77, 83*, 22, 113* என்று மொத்தமாக 316 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு கேப் தன் வசப்படுத்தியுள்ளார்.
Virat Kohi 7500 Runs
இதற்கு முன்னதாக சுப்மன் கில் 89 ரன்கள், சுனில் நரைன் 85 ரன்கள், ரியான் பராக் 84 ரன்கள் எடுத்து அதிகபட்ச ரன்கள் எடுத்திருந்தனர். இவர்களது சாதனையை கோலி 90 ரன்கள் எடுத்து முறியடித்து அதிகபட்ச ஸ்கோர் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்துள்ளது.