சிஎஸ்கே தூக்கி எறிந்த வீரருக்கு அடித்த ஜாக்பாட்..! ரூ.18 கோடியை தட்டித்தூக்கிய யார்க்கர் மன்னன்!

Published : Dec 16, 2025, 04:22 PM IST

IPL 2026 Auction: மினி ஏலத்துக்கு முன்னதாக இவரை சிஎஸ்கே அணியில் இருந்து விடுவித்தது. ஆனால் சிஎஸ்கே தூக்கி எறிந்த மதிஷா பதிரானா இப்போது ரூ.18 கோடிக்கு ஏலம் போய் கெத்து காட்டியுள்ளார்.

PREV
13
ஐபிஎல் மினி ஏலம் 2026

ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் அனைவரும் எதிர்பார்த்தபடி ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கீரினை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 

அதே வேளையில் அனைவரும் எதிர்பார்க்காதபடி அதிரடி வீரர்கள் லியோம் லிவிங்ஸ்டன், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ஜானி போர்ஸ்டோ, சர்ப்ராஸ் கான் ஆகியோர் ஏலம் போகவில்லை.

23
மதிஷா பதிரனா ரூ.18 கோடிக்கு ஏலம்

இதேபோல் யாரும் எதிர்பார்க்காத வகையில் இலங்கை பாஸ்ட் பவுலர் மதிஷா பதிரனா ரூ.18 கோடிக்கு ஏலம் போயுள்ளார். இவரையும் கொல்கத்தா நைட் ரைடஸ் அணி தான் தட்டித்தூக்கியுள்ளது. மதிஷா பதிரனாவின் அடிப்படை விலை ரூ.2 கோடியாகும். 

ஆனால் யார்க்கர் பந்துகளை அதிகம் போடும் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்பதால் மதிஷா பதிரனாவை எடுக்க நிறைய அணிகள் போட்டி போட்டன. இதனால் இவரது விலை ரூ.5 கோடி, ரூ.10 கோடி, ரூ.15 கோடி என தாண்டி சென்ற நிலையில் கடைசியில் கொல்கத்தா அணி ரூ.18 கோடிக்கு மதிஷா பதிரனாவை வாங்கியுள்ளது.

33
சிஎஸ்கே தூக்கி எறிந்தது

இலங்கையை சேர்ந்த 23 வயதான மதிஷா பதிரானாவை கடந்த 2021ம் ஆண்டு சிஎஸ்கே ரூ.20 லட்சம் அடிப்படை விலைக்கு வாங்கியது. அதன்பிறகு அவர் 2022, 20023, 2004 மற்றும் 2025ம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். 2023ல் சிஎஸ்கே இவரை ரூ.12 கோடிக்கு தக்க வைத்திருந்தது. மினி ஏலத்துக்கு முன்னதாக இவரை சிஎஸ்கே அணியில் இருந்து விடுவித்தது. ஆனால் சிஎஸ்கே தூக்கி எறிந்த மதிஷா பதிரானா இப்போது ரூ.18 கோடிக்கு ஏலம் போய் கெத்து காட்டியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories