MS Dhoni: 2026 ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதி படுத்தி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் விளையாடும் மூத்த வீரர்களில் தோனி முக்கியமான நபராக இருக்கிறார்.
24
CSK கேப்டன் தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட தோனி அந்த பொறுப்பை இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் ருதுராஸ் கெய்க்வாடிடம் கடந்த 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஒப்படைத்தார். ஆனால் கடந்த ஆண்டு காயம் காரணமாக ருதுராஜ் விலகிய நிலையில் தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டனாக பொறுப்பேற்றார்.
34
தோனியின் ஃபிட்னஸ்
தோனி கேப்டனாக பொறுப்பேற்ற போதும் வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடம் பிடித்து வரலாற்றில் மோசமான சாதனையைப் பதிவு செய்தது. சென்னை அணியின் மோசமான செயல்பாட்டால் தோனி 2025 ஐபிஎல் தொடரிலேயே ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2026ல் உடல் நிலையைப் பொறுத்து ஓய்வு தொடர்பாக முடிவெடுப்பேன் என தோனி தெரிவித்தார்.
இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடரில் தோனி உறுதியாக விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிபடுத்தி உள்ளார். இந்த அறிவிப்பு சென்னை அணி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.